twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கபாலி உரிமையைப் பெற 'போட்டா போட்டி'!!

    By Shankar
    |

    இந்தியத் திரையுலகில் ரஜினியின் முக்கியத்துவம் என்ன... அவரது மவுசு என்ன என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது கபாலி.

    லிங்காவில் நன்றாக கல்லா கட்டி, பொய்க் கணக்கு காட்டி சரியாகப் போகவில்லை என்று கூறிய அத்தனை பேரும் இப்போது கபாலியை வாங்க வரிசை கட்டி நிற்கின்றனர்.

    ஒருவர், இருவரல்ல... 30 பேராம். லிங்கா மீது அவதூறு பரப்பியவர்களும் இதில் அடங்கும். அட நேரடியா தரலேன்னாலும், வேற பேர்லன்னாலும் வாங்கிக்கிறோம் என மல்லுக்கட்டுகிறார்களாம்.

    Tough competition to get Kabali rights in Tamil

    ஏற்கெனவே இந்தப் படத்தின் அமெரிக்க உரிமையை பெரும் விலைக்கு விற்றிருக்கிறார் தாணு. 300-க்கும் அதிகமான அரங்குகளில் கபாலி தமிழில் வெளியாகப் போகிறது. இது தமிழ் திரை வரலாற்றில் தனி சாதனை. தெலுங்கிலும் படம் வெளியாகவிருக்கிறது. இந்தியில் வெளியிடும் திட்டம் இப்போதைக்கு இல்லை எனத் தெரிகிறது.

    அமெரிக்க உரிமை விற்பனையான செய்தி வெளியான அடுத்த கணத்திலிருந்து கலைப்புலி தாணுவின் போன்கள் அத்தனை பிஸி. தமிழ் பதிப்பை வெளியிடும் உரிமையைக் கேட்டு 30 நிறுவனங்களும், தயாரிப்பாளர்களும் போட்டி போடுகிறார்களாம்.

    தயாரிப்பாளர் தாணுவுக்கு இது மிகப் பெரிய திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. "ரஜினி எப்பவுமே அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார்ங்க. அவர்தான் பாக்ஸ் ஆபீஸின் நிரந்த சக்கரவர்த்தி என்பதை நானே கண்கூடாக உணர்கிறேன்," என்று தன் நண்பர்களிடம் சொல்லிச் சொல்லி பெருமிதப்படுகிறாராம்.

    35 ஆண்டுகள் காத்திருந்ததற்கு கிடைத்த மெகா ஜாக்பாட் இது!

    English summary
    More than 30 producers and releasing companies are trying to get Rajinikanth's Kabali at any price.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X