»   »  சாய்ராட்... தமிழ்நாட்டில் பார்க்காத ஆணவக் கொலைகளா... இருந்தாலும்...!

சாய்ராட்... தமிழ்நாட்டில் பார்க்காத ஆணவக் கொலைகளா... இருந்தாலும்...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெறும் 2 கோடி செலவில் புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்ட சாய்ராட் மராத்தி படம் சுமார் முப்பது கோடியை தாண்டி வசூலித்திருக்கிறது. சிலர் ஆர்வ மிகுதியில் நூறு கோடி வசூல் கணக்கெல்லாம் சொல்கிறார்கள்.

ஆணவக் கொலையை அப்படியே தோலுரித்துக் காட்டியதால் இந்தியாவே இப்படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது.

Tough competition to get Sairat remake rights

இந்தப் படத்துக்கு தமிழ்நாட்டு விமர்சகர்கள் மத்தியிலும் கிடைத்த வரவேற்பைப் பார்த்த தமிழ் சினிமாக்கார்கள் சாய்ராட்டின் தமிழ் ரீமேக் உரிமையைப் பெற போட்டி போடுகின்றனர். முக்கியமாக லிங்கா படத்தின் தயாரிப்பாளரும் ரஜினியின் நண்பருமான ராக்லைன் வெங்கடேஷ் இதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

இதுதவிர மேலும் சில தயாரிப்பாளர்களும் சாய்ரட்டின் இயக்குநர் கம் தயாரிப்பாளர் நாகராஜ் மஞ்சுளேவை முற்றுகையிட்டுள்ளனர்.

இத்தனைக்கும் சாய்ரட் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நம்ம ஊர் காதல் படத்தை தழுவியே இருக்கும். க்ளைமாக்ஸ் மட்டும் ஆணவக் கொலையோடு முடிகிறது.

ஆணவக் கொலை கதைகளுக்கா தமிழ்நாட்டில் பஞ்சம்? இங்கேதான் மாதத்துக்கு ஒரு ஆணவக் கொலை நடக்கிறதே? இருந்தாலும் காப்பி அடித்தே ஆக வேண்டும் நம்மவர்களுக்கு...!

English summary
Some Tamil cinema producers and directors are trying hard to get the remake rights of recent sensational hit Marathi film Sairat.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil