»   »  ப்ரின்ஸ் 25 க்காக அடித்துக்கொள்ளும் தெலுங்கு இயக்குநர்கள்

ப்ரின்ஸ் 25 க்காக அடித்துக்கொள்ளும் தெலுங்கு இயக்குநர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நம்மூரில் விஜய் போல தெலுங்கில் மகேஷ் பாபு. ப்ரின்ஸ் என செல்லமாக அழைக்கப்படும் மகேஷ்பாபு விஜய், அஜித் போலவே தன் இயக்குநர்களை தானே தேர்ந்தெடுப்பார்.

அப்படி அவரை இயக்குவதற்கு ஒரு பெரிய போட்டியே நடக்கும். இப்போது நம்ம ஏஆர்முருகதாஸ் இயக்கத்தில் 23 வது படத்தில் நடிக்கும் மகேஷ்பாபு அடுத்து 24 வது படமாக கொரட்டல சிவா இயக்கத்தில் நடிக்கிறார். அதற்கும் அடுத்த படம் 25 வது வெள்ளி விழா படம். அதனை இயக்க மூன்று இயக்குனர்கள் போட்டி போடுகிறார்கள்.

Tough race between top directors to direct 'Prince 25'

பூரி ஜெகன்னாத், வம்சி பைடிப்பள்ளி, த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஆகிய மூவர் தான் அந்த வெய்டிங் லிஸ்ட் இயக்குனர்கள். மூவருக்குமே படம் பண்ணுவதாக வாக்குறுதி தந்திருக்கிறார் மகேஷ்பாபு. இதில் பூரி ஜெகன்னாத் 'ஜனகணமன' என்று டைட்டிலையே அறிவித்துவிட்டார்.

பிவிபி தயாரிப்பில் மகேஷ்பாபுவை தான் இயக்கவிருப்பதாக அறிவித்தார் தோழா வம்சி. த்ரிவிக்ரமும் மகேஷ்பாபுவை இயக்கப்போவதாக தனது பிறந்தநாளில் அறிவித்திருக்கிறார்.

யாருக்கு லக் அடிக்குது என்று பார்ப்போம்!

English summary
Top Telugu directors in race to direct Mahesh Babu's 25th movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil