‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநருக்கு திருமணம்.. BMW காரை பரிசளித்த தயாரிப்பாளர்!
சென்னை: 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் வரும் 31ந் தேதி திருமணம் நடைபெற உள்ளதால், திருமணபரிசாக MRP_ENTERTAIN இன் தயாரிப்பாளர் மகேஷ்ராஸ் BMW காரை பரிசளித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடித்த திரைப்படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இப்படத்தில் மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, யோக லட்சுமி என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். ஈழத்தமிழர்களின் வாழ்வியல் போராட்டத்தைப் பேசும் இத்திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். வெறும் 7 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் அழுத்தமான கதை, சசிக்குமாரின் உணர்வுபூர்வமான நடிப்பு காரணமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் குவித்து நடப்பாண்டில் அதிக லாபம் ஈட்டித் தந்த திரைப்படமாக இப்படம் உள்ளது.

டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்: இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்குத் தப்பி வந்து வசிக்கும் குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழ் சினிமா கவனிக்கக்கூடிய இயக்குனராக அபிஷன்ஜீவிந்த் மாறினார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அபிஷன்ஜீவிந்த் கதாநாயகனாக மாறி உள்ளார். குட்நைட், லவ்வர், டூரிஸ்ட் பேமிலி போன்ற வெற்றிப் படங்களை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் மற்றும் ஏ.ஆர்.பி. எண்டர் டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் யுவராஜ், மகேஷ்ராஜ் பசலியான் ஆகியோர் தயாரித்து இருந்தனர். தற்போது புதிய படமொன்றை தயாரிக்க இருக்கிறார். படத்தின் கதாநாயகனாக டூரிஸ்ட் பேமிலி பட இயக்குனரான அபிஷன்ஜீவிந்த் நடிக்கிறார். கதாநாயகியாக பிரபல மலையாள நடிகை அனஸ்வர ராஜன் நடிக்க இருக்கிறார். டூரிஸ்ட் பேமிலி படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக இருந்த மதன் இந்த படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது.
தரமான பரிசு: இந்நிலையில், டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் வரும் 31ந் தேதி திருமணம் நடைபெற உள்ளதால், திருமண பரிசாக MRP_ENTERTAIN இன் தயாரிப்பாளர் மகேஷ்ராஸ் BMW காரை பரிசளித்துள்ளார். இந்த போட்டோவை மகேஷ்ராஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











