ஓடிடியில் வெளியான டொவினோ தாமஸ் படம்.. அந்த சண்டைக் காட்சியை டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்!

சென்னை: இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்கத்தில் டொவினோ தாமஸ், கல்யாணி பிரியதர்ஷன், ஷைன் டாம் சாக்கோ நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி தியேட்டரில் வெளியான படம் தல்லுமாலா.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியான அந்த படத்தை இந்தியா முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தியேட்டருக்கு சென்று இப்படியொரு படத்தை பார்க்க தவறிவிட்டோமே என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

ஓடிடி ரிலீஸ்

ஓடிடி ரிலீஸ்

டொவினோ தாமஸின் மின்னல் முரளி படத்தைத் தொடர்ந்து தல்லுமாலா படமும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது. மலையாள படமான தல்லுமாலா தியேட்டரில் வெளியாகி அங்கே மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், ஓடிடியில் வெளியாகி மற்ற மாநில ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

ஹாஷ்டேக் டிரெண்டிங்

ஹாஷ்டேக் டிரெண்டிங்

#Thallumaala என்கிற ஹாஷ்டேக்கை போட்டு கோலிவுட் ரசிகர்கள் முதல் பலரும் தல்லுமாலா படத்தை கொண்டாடி வருகின்றனர். டொவினோ தாமஸ் மிரட்டி விட்டுள்ளார் என பலரும் அவரையும் படத்தின் இயக்குநரையும் மற்ற நடிகர்களையும், ஸ்டன்ட் இயக்குநரையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

தியேட்டர் ஃபைட்

தியேட்டர் ஃபைட்

அதிலும், அந்த தியேட்டரில் அத்தனை பேரை போட்டு ஹீரோ டொவினோ தாமஸ் அடிக்கும் சண்டைக் காட்சியை ஷேர் செய்து ரசிகர்கள் ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு வேறலெவல் படம் என புகழ்ந்து தள்ளி வருகின்றனர். மேலும், அந்த படத்தின் சண்டை இயக்குநர் தான் சூர்யாவின் 42 படத்துக்கு சண்டை இயக்குநர் என்றும் கூடுதல் தகவல்களை கொடுத்துள்ளனர்.

சுப்ரீம் சுந்தர்

சுப்ரீம் சுந்தர்

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடித்து வரும் சூர்யா 42 படத்துக்கும் சுப்ரீம் சுந்தர் தான் பிரம்மாண்ட சண்டைக் காட்சிகளை அமைக்க போகிறார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். இதை விட பிரம்மாண்டமான போர் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் எப்படி மிரட்டலாக எடுக்கப் போகிறாரோ என எதிர்பார்ப்புகளை எகிற விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X