»   »  விஜய் சேதுபதிக்காக 36 வருட வைராக்கியத்தை உடைத்த டி.ஆர்!

விஜய் சேதுபதிக்காக 36 வருட வைராக்கியத்தை உடைத்த டி.ஆர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இதுவரை தனது சொந்த இயக்கத்தில் மட்டுமே நடித்து வந்த டி.ராஜேந்தர், 36 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக வேறு இயக்குநரின் படத்தில் நடிக்க இருக்கிறார்.

கடந்த 1980ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குநராக, நடிகராக என பல்வேறு திறமைகளுடன் ஆல் இன் ஆல் அழகுராஜாவாக அறிமுகமானவர் டி.ராஜேந்தர். குடும்பப்பாசம் குறித்த இவரது படங்களுக்கு, காலம் கடந்தும் மக்களிடையே ஆதரவு உள்ளது.

தனது அடுக்குமொழிப் பேச்சால் தனக்கென தனி வட்டத்தை உருவாக்கிய டி.ஆர்., தான் இயக்கிய படங்களில் மட்டுமே இதுவரை நடித்துள்ளார். வேறு எந்த இயக்குநரின் படங்களிலும் இதுவரை அவர் நடித்ததில்லை.

ஆர்யா சூர்யா...

ஆர்யா சூர்யா...

கடந்த 2014ம் ஆண்டு வெளியான ஆர்யா சூர்யா படத்திலும் ஒரு குத்துப்பாடலைப் பாடி, அதற்கு நடனமாடி இருந்தார் டி.ஆர். அந்தப் படத்தில் பவர்ஸ்டார் நாயகனாக நடித்திருந்தார்.

முதன்முறையாக...

முதன்முறையாக...

இந்நிலையில், தனது 36 வருட திரையுலக வாழ்க்கையில் முதன்முறையாக வேறு இயக்குநரின் படமொன்றில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் டி.ஆர். இந்தப் படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறார்.

விஜய் சேதுபதி...

விஜய் சேதுபதி...

விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மிகுந்த பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாராகும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் டி.ஆர்.

விரைவில் அறிவிப்பு...

விரைவில் அறிவிப்பு...

இப்படத்தின் கதாநாயகி, ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Veteran director T.Rajendar completed approximately 36 years in Tamil cinema. For the first time the multi faceted TR will be spotted playing a major role in another director's film, as his silver screen appearances have always been cameos or under his own directorial ventures.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil