»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil


மன்மதன் பாடல் கேசட் வெளியீட்டின்போது டி.ராஜேந்தர் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து அசந்து போனார் யானாகுப்தா.

மன்மதன் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.விழாவில் சிம்பு, டி.ராஜேந்தர், ஜோதிகா, தயாரிப்பாளர்கள் காஜா மொய்தீன், முரளிதரன், இயக்குநர்கள் சேரன்,தரணி, சரண், ரமணி, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, எழுத்தாளர் பாலகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவர்களோடு இந்தப் படத்தின் மூலம் தமிழகத்தைத் தாக்கப் போகும் அழகுப் புயல்கள் மந்திரா பேடியும், யானாகுப்தாவும் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சிகளை ரேடியோ மிர்ச்சி சுசித்ரா தொகுத்து வழங்கினார்.

பாடல் கேசட்டை டி.ராஜேந்தரும், ஜோதிகாவும் இணைந்து வெளியிட மந்திரா பேடியும், யானா குப்தாவும் அதைபெற்றுக் கொண்டார்கள். தரணி, சேரன் என ஒவ்வொருவராக வரிசையாக வந்து சொல்லிவைத்தாற்போல்சிம்புவை பாராட்டி விட்டுப் போனார்கள்.

த்ரிஷாவுக்கு டி.ராஜேந்தர் கொடுத்த குட்டை மறக்கவில்லையோ என்னவோ, ஜோதிகா மட்டும் கடைசிவரை மைக்பிடிக்கவே இல்லை. டி.ராஜேந்தர் பேச வந்தபோதுதான் மேடையே களை கட்டியது.

விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் அடுக்கு மொழியில் வரவேற்றார். பின்பு தனது வழக்கமான ஆவேசப்பேச்சுக்குத் தாவினார். சிம்புவின் விரல் வித்தை பற்றி கமெண்ட் அடிப்பவர்களைத் தாளித்து எடுத்தவர் அடுத்துபேசும்போது, சேரன் காலத்தில் இல்லை, அவரது பேரன் காலத்துலேலேயும் இந்த விஜய டிராஜேந்தர் இருப்பான்.1984ல் ஒரு டி.ராஜேந்தர் உதயம். இந்த 2004ல் விஜய டிராஜஜேந்தர் உதயம்.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள். 2010ல் சிம்புதான் சூப்பர் ஸ்டார் என்று கூறி வந்திருந்தவர்களைஅதிர்ச்சிக்குள்ளாக்கினார். தனது ஆரம்ப காலத்தை நினைத்து கண் கலங்கினார். திடீர் என்று ஹிந்தியில் பாட்டுப்பாடியவாறே டான்ஸ் ஆடத் தொடங்க, யானா குப்தாவும், மந்திரா பேடியும் அசந்து போனார்கள்.

டி.ராஜேந்தர் நியுமராஜிப்படி தனது பெயரை விஜய டிராஜேந்தர் என்று மாற்றி வைத்துள்ளார். டி.ஆர் பேசியதையுவன்சங்கர் ராஜா அவ்வப்போது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து மந்திரா பேடியிடம் சொன்னார்.

முன்னதாக படத்தில் இருந்து 3 பாடல்களை போட்டுக் காண்பித்தார்கள். ஒவ்வொரு பாடலையும்மிரட்டியிருக்கிறார்கள். டி.ராஜேந்தரின் என் ஆசை மைதிலியே பாடலை ரீமிக்ஸ் செய்து தந்திருக்கிறார்யுவன்சங்கர் ராஜா. படத்தில் வேண்டுமானால் சிம்பு கதாநாயகனாக இருக்கலாம். ஆனால் கேசட் வெளியீட்டுவிழாவில் டி.ராஜேந்தர்தான் கதாநாயகனாக இருந்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil