»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்ப் படங்களுக்கு தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும் இயக்குனர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.அதேபோல தமிழில் பெயர் வைப்பதை நடிகர் சத்யராஜும் ஆதரித்துள்ளார்.

தமிழப் படங்களுக்கு தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில்அங்கம் வகிக்கும் பாமக, விடுதலை சிறுத்தைகள் ஆகியவை வலியுறுத்தி வருகின்றன. ஆங்கிலப் பெயருடன்வெளியாகும் படங்களை திரையிட விட மாட்டோம் என்றும் அவை மிரட்டியும் வருகின்றன.

இவர்களது மிரட்டலையடுத்து முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு, படங்களை திரையிடுவதைத் தடுத்தால்காவல்துறை அமைதியாக இருக்காது என்று எச்சரித்துள்ளார்.

இந் நிலையில் தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைப்பதற்கு நடிகர்கள், நடிகையர்கள் ஆதரவும் எதிர்ப்பும்தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் விஜய டி.ராஜேந்தர் கூறுகையில், எனது படங்களுக்கு தூய தமிழில்தான் பெயர்வைத்துள்ளேன். தமிழ் எந்த விதத்திலாவது வளர வேண்டும். அதுதான் எனது ஆசை.

தமிழ் இனி மெல்லச் சாகும் என்ற கருத்து பொய்யாக்கப்பட வேண்டும். தமிழ்ப் படங்களுக்கு தமிழில்தான் பெயர்வைக்க வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை என்றார் விஜய டி.ராஜேந்தர்.

இதே கருத்தையே நடிகர் சத்யராஜும் தெரிவித்துள்ளார். தமிழ்ப் படங்களுக்கு தமிழில்தான் பெயர் வைக்கவேண்டும் என்று கூறும் அளவுக்கு தமிழ் சினிமாவில் ஆங்கிலப் பெயர்களின் ஆதிக்கம் பெருகி விட்டது.

என்னைப் பொருத்தவரை தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று கூறப்படுவதை வரவேற்கிறேன்.இதுதொடர்பாக பலரும் பல கருத்துக்களை கூறி வருகிறார்கள். அதில் தலையிட விரும்பவில்லை.

யாரையும் கட்டாயப்படுத்தி தமிழ்ப் பெயர் சூட்ட வைக்க முடியாது. எனது படங்களுக்கு தமிழில் பெயர்சூட்டினால் சந்தோஷமடைவேன் என்றார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil