twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிராபிக் ராமசாமி - படம் எப்படி இருக்கு? ஒன்இந்தியா!

    சமூக போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படம் டிராபிக் ராமசாமி.

    |

    Rating:
    2.0/5
    Star Cast: எஸ்.ஏ. சந்திரசேகர், ரோகினி, அம்பிகா
    Director: விக்கி

    சென்னை: சமூக போராளி டிராபிக் ராமசாமி வாழ்வின் போராட்ட அத்தியாயத்தை காட்சிப்படுத்தியிருக்கும் படம் டிராப்பிக் ராமசாமி.

    நடிகர்கள்- எஸ்.ஏ.சந்திரசேகர், ரோகினி, ஆர்.கே.சுரேஷ், விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, அம்பிகா, இமான் அண்ணாச்சி, எஸ்.வி.சேகர், அபர்நதி, சேத்தன், அம்மு மற்றும் பலர். தயாரிப்பு - கிரீன் சிக்னல் ப்ரொடக்ஷன்ஸ், இயக்கம் - விக்கி, இசை - பாலமுரளி.

    Traffic Ramasamy movie review

    கதை சுருக்கம் - டிராபிக் ராமசாசியின் வாழ்வைப்பற்றிய 'ஒன் மேன் ஆர்மி' எனும் புத்தகத்தை நடிகை குஷ்புவும், இயக்குனர் சீமானும் வெளியிடுகின்றனர். விஜய் சேதுபதி அந்த புத்தகத்தை வாசிக்க தொடங்குவதில் இதில் ஆரம்பிக்கிறது டிராபிக் ராமசாமியின் போராட்ட அத்தியாயம். சிறு சிறு சம்பவங்களை தொகுத்து, அவரது வாழ்க்கையை சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
    மனைவி, மகள், மகன் பேத்தி என குடும்பத்துடன் மகழ்ச்சியாக இருந்தாலும், சமுதயாத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதில் முதல் ஆளாக நிற்கிறார் டிராபிக் ராமசாமி. தன்னுடைய 75வது பிறந்தநாள் விழாவில் கூட கேக் வெட்டாமல், டாஸ்மாக்குக்கு எதிராக குரல் கொடுக்க சென்றுவிடுறார் மனிதர்.

    14வது வயதில், தன்னிடம் இருந்த அரிசிப் பையை பறித்துப்போகும் தாசில்தார் மீது புகார் கடிதம் எழுதிப்போட்டதில் இருந்து துவங்குகிறுது டிராபிக் ராமசாமியின் போராட்டக் குணம். ரோட்டில் எச்சில் துப்புபவரிடம் தகராறு செய்வது, அதை நியாயப்படுத்து பெண் காவல் அதிகாரியையும் அறைவது, கோர்ட்டில் நீதிபதி முன்பு தன்னை தானே செருப்பால் அடித்துகொள்வது என ஒவ்வொரு போராட்டமும் ஒருவிதம்.

    தண்ணீர் பிரச்சினைக்காக மேயரை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஜெயிக்கிறார் டிராபிக் ராமசாமி. இதனால் ஆத்திரமடையும் மேயர் ஆட்களை வைத்து, வயதான மனிதரை அடிக்கிறார். ஓரிடத்தில் விஜய் ஆண்டனி வந்து தட்டிக்கேட்டிகிறார்.

    பெண் காவல் அதிகாரியின் அதிகார அத்துமீறலை வெளிச்சம் போட்டு காட்டும் போது, ஸ்டேஷனிலேயே வைத்து வெளுவெளுவென வெளுத்து வாங்குகிறார் அந்த பெண் அதிகாரி. இதை பார்த்து இறக்கப்படும் ரவுடி டேனி (ஆர்.கே.சுரேஷ்), டிராபிக் ராமசாமிக்கு பக்கபலமாக மாறுகிறார்.

    டிராபிக் ராமசாமி மீதான பொய் வழக்கில் இருந்து அவரை விடுவிக்கிறார் நீதிபதி எஸ்.வி.சேகர். நேர்மையான போலீஸ் கமிஷ்னரான பிரகாஷ் ராஜ், அந்த பெண் அதிகாரியை டிஸ்மிஸ் செய்கிறார்.

    இப்படியாக படம் நகர்ந்துகொண்டிருக்கையில், மீன்பாடி வண்டிக்கு எதிராக டிராபிக் ராமசாமி தொடரும் வழக்கு, பலருக்கு ஆபத்தாக மாறுகிறது. இதனால் டிராபிக் ராமசாமியை தீர்த்துக்கட்ட வில்லன் கும்பல் துடிக்கிறது. அதில் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதை கமெர்சியலாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

    மேயர் 'கும்பூ' கோவிந்தன், தொழிலதிபர் ஸ்ரீனிவாச ரெட்டி, அமைச்சர் வெங்காயமண்டி வெங்கடேசன் என வில்லன்களின் பெயர்களை அற்புதமாக மேட்ச் செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் விக்கி. அதேபோல, அந்த பாத்திரங்களுக்கான நட்சத்திர தேர்வும் அருமை.

    எஸ்.ஏ.சந்திரசேகர் டிராபிக் ராமசாமியாகவே மாறியிருக்கிறார். நடை, உடை,பாவனை என நாம் பார்த்துகொண்டிருக்கும் டிராபிக் ராமசாமியை கண்முன் நிறுத்துகிறார். குரலில் மட்டும் தான் எஸ்.ஏ.சி. தெரிகிறார்.

    ஒரு போராளியின் மனைவி கதாபாத்திரத்துக்கு அவ்வளவு நியாயம் சேர்த்திருக்கிறார் ரோகினி. அதுபோல மற்ற நடிகர், நடிகைகளும் தங்கள் பாத்திரங்களை சரியாக செய்திருக்கிறார்கள்.

    ஆனால் முதற்பாதியில் இருந்த யதார்த்தம், பின்பாதியில் முற்றிலும் தளர்ந்துவிடுகிறது. அந்த குத்துப்பாடலை தவிர்த்திருக்கலாம். பாடலும், வரிகளும் ஓகே. ஆனால் காட்சிப்படுத்தியதில் சொதப்பல். நீதிமன்றக் காட்சிகள் யதார்த்தத்தை மீறி எடுக்கப்பட்டுள்ளன. அதுவும் நீதிபதி இருக்கையில் அமர்ந்துகொண்டு அம்பிகா செய்யும் அலப்பறைகள் கொஞ்சம் ஓவர். அவ்வளவு பாதுகாப்பு மிகுந்த நீதிமன்ற வளாகத்துக்குள், ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து, நீதிபதியை நோக்கி சுடுவதெல்லாம் டூடூ மச்.

    ஒரு போராளியின் வாழ்வை நேரடியாக ஆவணப்படுத்தாமல், கமெர்சியலாக சொல்ல முயன்றிருக்கிறார்கள். டிராபிக் ராமசாமி என்பவர், வெறுமனே ரோட்டில் உள்ள பேனர்களை கிழிப்பவர் மட்டுமல்லர் என்பதையும் அழத்தமாக சொல்கிறது இந்தப் படம். எது எப்படி இருந்தாலும், டிராபிக் ராமசாமிக்காக நிச்சயம் படத்தை பார்க்கலாம்.

    மார்க் 3/5.

    English summary
    The tamil movie Traffic Ramasamy is the biopic of the real time anti corruption fighter traffic Ramasamy. The movie tells his story in cinema pattern.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X