»   »  கிறிஸ்துமஸ் அன்று தீபிகா ஷூட்டிங்கில் சோகம்: தவறி விழுந்து பெயிண்டர் பலி

கிறிஸ்துமஸ் அன்று தீபிகா ஷூட்டிங்கில் சோகம்: தவறி விழுந்து பெயிண்டர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தீபிகா படுகோனே நடித்து வரும் பத்மாவதி படப்பிடிப்பு தளத்தில் பெயிண்ட் அடிப்பவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாஹித் கபூர், அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோரை வைத்து பத்மாவதி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

Tragedy On The Sets Of Padmavati! Painter Loses His Life

இந்த படத்திற்காக பிரமாண்ட செட் போட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் அன்று மாளிகை செட்டில் இருந்த கோபுரத்திற்கு 34 வயது முகேஷ் தாகியா என்பவர் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் 5 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

English summary
An unrfortunate tragedy took place at the sets of Padmavati on Christmas day as a 34-year-old painter named Mukesh Dakia fell to his death while working on the final touch ups on the tip of a tomb.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil