»   »  மம்மூட்டி பட ஹீரோயின் யார் என தெரிந்தால் அப்படியே ஷாக் ஆயிடுவீங்க!

மம்மூட்டி பட ஹீரோயின் யார் என தெரிந்தால் அப்படியே ஷாக் ஆயிடுவீங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு ஜோடியாக மூன்றாம் பாலினத்தை சேர்ந்த அஞ்சலி அமீர் நடிக்கிறார்.

இயக்குனர் ராம் மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டியை வைத்து பேரன்பு என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் அஞ்சலி நடித்து வருகிறார். படத்தில் மற்றொரு அஞ்சலியும் ஹீரோயினாக வருகிறார். அவரின் முழுப்பெயர் அஞ்சலி அமீர். திருநங்கை ஆவார்.

21 வயது அஞ்சலிக்கு பட வாய்ப்பு அளித்து ராம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

அஞ்சலி அமீர்

அஞ்சலி அமீர்

திருநங்கைகளின் உணர்வுக்கு முக்கியத்துவம் அளித்து ராம் அஞ்சலியை ஹீரோயினாக்கியுள்ளார். பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு அஞ்சலி முழு பெண்ணாக மாறியுள்ளார்.

மம்மூட்டி

மம்மூட்டி

மம்மூட்டி என்கிற பெரிய நடிகருடன் சேர்ந்து நடிக்க அஞ்சலி அமீர் முதலில் பயந்துள்ளார். ஆனால் மம்மூட்டி அவருக்கு தைரியம் சொல்லி நடிக்க வைத்துள்ளார்.

பெங்களூர்

பெங்களூர்

அஞ்சலி 19 வயதில் பெங்களூருக்கு படிக்க வந்தபோது தனக்குள் இருக்கும் பெண்ணை உணர்ந்து அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியுள்ளர்.

மாடல்

மாடல்

அஞ்சலி மாடல் அழகியாகவும் உள்ளார். வரும் பிப்ரவரி மாதம் மும்பையில் நடக்க உள்ள லாக்மி ஃபேஷன் வீக் ஃபேஷன் ஷோவில் ராம்ப் வாக் செய்ய உள்ளார் அஞ்சலி அமீர். எத்தனையோ நடிகைகள் இருக்கும்போது அஞ்சலி அமீருக்கு வாய்ப்பு கொடுத்த ராமுக்கு வாழ்த்துக்கள்.

English summary
Director Ram has made a transgender named Anjali Ameer as his movie Peranbu's leady lady. Peranbu has Mammooty playing the lead role.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil