»   »  டியர் தல, தளபதி ரசிகர்களா..: இந்த தீபாவளிக்கு உங்களுக்கு ட்ரீட் இருக்கு

டியர் தல, தளபதி ரசிகர்களா..: இந்த தீபாவளிக்கு உங்களுக்கு ட்ரீட் இருக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த தீபாவளி தல-தளபதி தீபாவளியா, எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள். ரொம்ப யோசிக்க வேண்டாம், இதை படிங்க.

விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் ஆகியோரை வைத்து பரதன் 'விஜய் 60' படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு 75 சதவீதம் முடிந்துவிட்டது. மறுபக்கம் அஜீத் 'தல 57' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Treat awaits Thala, Thalapathy fans this Diwali

சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படத்தில் அஜீத்தின் மனைவியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் அஜீத்தின் பார்ட்னராக நடிக்கிறார்.

இரண்டு படங்களுமே இந்த தீபாவளிக்கு ரிலீஸாக வாய்ப்பு இல்லை. ஆனால் தல, தளபதி படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் தலைப்பு ஆகியவை தீபாவளி அன்று வெளியாகக்கூடும் என்று கூறப்படுகிறது.

தீபாவளி அன்று தல, தளபதி ரசிகர்களுக்கு விருந்து உள்ளதா இல்லையா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை காத்திருப்போம்.

English summary
The first look posters and titles of Thala and Thalapathy's upcoming movies may get released on Diwali.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil