»   »  ஶ்ரீதேவிக்கு ஹாலிவுட் திரையுலகம் கௌரவம்.. ஆஸ்கர் விழாவில் அஞ்சலி!

ஶ்ரீதேவிக்கு ஹாலிவுட் திரையுலகம் கௌரவம்.. ஆஸ்கர் விழாவில் அஞ்சலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணி முதல் ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிரமாண்டமான அரங்கில் நடைபெற்று வருகிறது.

சிறந்த படங்கள், சிறந்த கலைஞர்கள் ஆகியோர் அறிவிக்கப்பட்டு விருதுகள் பெறும் கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இந்த விருது வழங்கும் விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tribute to sridevi and shashi kapoor in oscar awards

ஸ்ரீதேவியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதாக விழாவில் அறிவிக்கப்பட்டவுடன் விழாவில் கலந்து கொண்ட அனைத்து நட்சத்திரங்களும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.

ஒரு இந்திய நடிகைக்கு அதிலும் ஒரு தமிழ் நடிகைக்கு ஹாலிவுட் உலகில் மரியாதை கிடைத்தது ஒரு பெரும் பெருமையாக கருதப்படுகிறது. ஸ்ரீதேவி ஹாலிவுட் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் அவரது 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' உள்பட பல திரைப்படங்கள் வெளிநாட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த நடிகரும், தயாரிப்பாளருகாம சஷி கபூருக்கும் ஆஸ்கர் விருது விழாவில் மரியாதை செலுத்தப்பட்டது. அவரது படம் திரையில் காட்டப்பட்டு அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

English summary
Actress Sridevi was honored at The Oscar Festival. All the stars participated in the ceremony stood up for a minute and paid silence to pay tribute to Sridevi and Shashi kapoor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil