»   »  ஆதிக் இயக்கத்தில் சிம்புவின் ‘ட்ரிபிள் ஆக்‌ஷன்’ ட்ரீட்... 3 நாயகிகளில் ஒருவர் பாலிவுட் நடிகை..!

ஆதிக் இயக்கத்தில் சிம்புவின் ‘ட்ரிபிள் ஆக்‌ஷன்’ ட்ரீட்... 3 நாயகிகளில் ஒருவர் பாலிவுட் நடிகை..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகர் சிம்பு. இப்படத்தில் அவர் மூன்று வித கேரக்டர்களில் நடிக்கிறார்.

கடந்த சில வருடங்களாக பல்வேறு காரணங்களால் சிம்பு படங்களுக்கு தொடர்ந்து முடக்கம் ஏற்பட்டு வருகிறது. பல்வேறு போராட்டங்களுக்குப் பின் கடந்தாண்டு அவரது வாலு படம் ரிலீசானது.

அதனைத் தொடர்ந்து அவரது வேட்டை மன்னன், இது நம்ம ஆளு ஆகிய படங்கள் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

பீப் சர்ச்சை...

பீப் சர்ச்சை...

ஆனால், அதற்குள் பீப் பாடல் விவகாரத்தில் சிக்கினார் சிம்பு. அப்பாடல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகள், கண்டனப் போராட்டங்கள் என சிம்புவிற்கு எதிர்ப்பு அதிகமாக இருந்தது. இதனால் தலைமறைவாக இருந்தார் சிம்பு.

பிறந்தநாள்...

பிறந்தநாள்...

தற்போது அந்த விவகாரம் சற்று அடங்கியுள்ள நிலையில், தனது பிறந்தநாளன்று வெளியே வந்து ரசிகர்களுக்கு தரிசனம் தந்தார்.

இது நம்ம ஆளு...

இது நம்ம ஆளு...

அன்றைய தினம் அவரது இது நம்ம ஆளு படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெயிலர் ரிலீஸ் ஆனது. அதற்கு ரசிகர்ளின் ஏகோபித்த வரவேற்பும் கிடைத்தது. அடுத்த மாதம் இது நம்ம ஆளு ரிலீஸ் ஆகும் எனத் தெரிகிறது.

அச்சம் என்பது மடமையடா...

அச்சம் என்பது மடமையடா...

தற்போது 'இது நம்ம ஆளு' படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறார் சிம்பு. இதுதவிர 'அச்சம் என்பது மடமையடா' படத்திலும் அவர் நடிக்க இருக்கிறார்.

புதிய படம்...

புதிய படம்...

இந்நிலையில் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம் சிம்பு. திரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்குகிறார்.

விரைவில் அறிவிப்பு...

விரைவில் அறிவிப்பு...

இது குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் கூறுகையில், ''சிம்புவை சந்தித்து கதை சொன்னேன். அவருக்கு பிடித்துள்ளது. பண்ணலாம் என்று சொன்னார். இது பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியாகும்.

3 கேரக்டர்கள்...

3 கேரக்டர்கள்...

இப்படத்தில் காதல், ஆக்‌ஷன், காமெடி என எல்லாவிதமான அம்சங்களும் நிறைந்திருக்கும். அதுமட்டுல்ல இந்த படத்தில் சிம்பு மூன்று வித கேரக்டரில் நடிக்கிறார்.

பாலிவுட் ஜோடி...

பாலிவுட் ஜோடி...

அவருக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் தேர்வு செய்யவுள்ளனர். அதில் ஒருவர் பாலிவுட் ஹீரோயின்'' என்றார்.

முதன்முறையாக...

முதன்முறையாக...

ஏற்கனவே, மன்மதன் மற்றும் சிலம்பாட்டம் ஆகிய படங்களில் சிம்பு இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். ஆதிக்கின் இந்தப் புதிய படத்தில் தான் அவர் முதன் முறையாக 3 வேடங்களில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Simbu, who is busy with Gautham Menon's "Achcham Yenbadhu Madamaiyada," will be seen in triple role in his next film with Adhik Ravichandran.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil