மெளனம் பேசியதே டு பொன்னியின் செல்வன்.. 20 ஆண்டுகளை கடந்த த்ரிஷா.. வாவ் எவ்ளோ அழகு!
சென்னை: நடிகை த்ரிஷா சினிமா உலகுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் அளித்த அன்பு பரிசுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார் நடிகை த்ரிஷா.
சூர்யாவின் மெளனம் பேசியதே படத்தின் மூலம் தான் இயக்குநராக அறிமுகமானார் அமீர். சமீபத்தில் மெளனம் பேசியதே வெளியாகி 20 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு ஒரு நன்றி கடிதம் வெளியிட்டு இருந்தார்.
அந்த படத்தில் அறிமுகமான நடிகை த்ரிஷாவும் தற்போது 20 ஆண்டுகள் சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வருவதை கொண்டாடி உள்ளார்.

20 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம்
1999ம் ஆண்டு பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் தோழியாக ஒரு சில காட்சிகளில் தோன்றியிருப்பார். அதை தொடர்ந்து 2002ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான மெளனம் பேசியதே திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் த்ரிஷா. மெளனம் பேசியதே படத்தில் சிரித்து சிரித்து பேச சூர்யா தன்னைத் தான் அவர் காதலிக்கிறார் என நம்பி ஏமாறும் காட்சிகளும் அந்த படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட்.

20 இயர்ஸ் ஆஃப் த்ரிஷா
மெளனம் பேசியதே முதல் பொன்னியின் செல்வன் வரை சினிமாவில் 20 ஆண்டுகள் கடந்துள்ளார் நடிகை த்ரிஷா. சமீபத்தில் மெளனம் பேசியதே படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனதை இயக்குநர் அமீர் அறிவித்திருந்த நிலையில், தற்போது 20 இயர்ஸ் த்ரிஷா விருதுடன் நடிகை த்ரிஷா எடுத்துக் கொண்ட க்யூட்டான போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

மிளகாய் பொடி மாமி
சியான் விக்ரம் உடன் சாமி படத்தில் மிளகாய் பொடி மாமியாக நடிகை த்ரிஷா அழகு பதுமையாக நடித்திருப்பார். அந்த படத்தில் இடம்பெற்ற 'கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா', 'அய்யய்யோ பிடிச்சிருக்கு', 'இதுதானா.. இவன் தானா' பாடல்கள் எல்லாம் வேறலெவலில் ஹிட் அடித்தன. த்ரிஷாவின் அழகில் ஏகப்பட்ட ரசிகர்கள் சொக்கிப் போனார்கள்.

தனலட்சுமி வண்டியில ஏறு
விஜய்யின் கில்லி படத்தில் தனலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் த்ரிஷா. முத்துப் பாண்டியின் செல்லமான த்ரிஷாவை விஜய் கழுத்தில் கத்தி வைத்து கடத்துவது போல காப்பாற்றும் காட்சிகளும், த்ரிஷாவை கடைசி வரை காதலிப்பதே தெரியாமல் அவரை விமான நிலையத்தில் விட்டு விட்டு வரும் போது தனலட்சுமி வண்டியில் ஏறு எனக் கூறும் இடங்கள் எல்லாம் ரசிகர்களும் சேர்ந்து த்ரிஷா மீது காதல் வயப்பட்டனர்.

உலகத்துல எவ்ளோ பொண்ணுங்க இருந்தும்
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் மூலம் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கினார் த்ரிஷா என்று தான் சொல்ல வேண்டும். ஜெஸ்ஸி கதாபாத்திரத்தில் அவர் சேலை அணிந்து செம க்யூட்டாக நடித்த காட்சிகளும், சிம்புவுடன் செய்யும் ரொமான்ஸும் உலகத்துல எவ்ளோ பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்றேன் என பல இளைஞர்களை சிம்பு போலவே பித்துப் பிடிக்க வைத்தார் த்ரிஷா.

அங்கேயே நிக்கிறேன் ஜானு
விஜய்சேதுபதியின் 96 திரைப்படம் நடிகை த்ரிஷாவுக்கு சினிமாவில் 3வது இன்னிங்ஸ் என்று தான் சொல்ல வேண்டும். எத்தனை வருடங்கள் ஆனாலும் எவர்க்ரீன் பியூட்டி என்று சொல்லும் அளவுக்கு 96 ஜானு கதாபாத்திரம் ஜெஸ்ஸி கதாபாத்திரத்தையே ஓவர்டேக் செய்து ஏகப்பட்ட பெண்களை அதே மஞ்சள் சுடிதாரை வாங்க வைத்தது. எங்க இருக்குற ராம் என த்ரிஷா கேட்க.. உன்னை எங்க விட்டுட்டுப் போனேனோ அங்கேயே இருக்கிறேன் என விஜய்சேதுபதி சொல்லும் காட்சிகளும், காமம் கடந்த இருவரது காதல் வெளிப்படும் காட்சிகளிலும் த்ரிஷாவின் நடிப்பு அபாரம்.

அடுத்த ரவுண்டு
ஹீரோயின்களின் கால அளவு 5 ஆண்டுகள் அல்லது அதிகபட்சம் 10 ஆண்டுகள் தான் என்கிற எழுதப்படாத விதியை சில ஹீரோயின்கள் மட்டுமே 20 ஆண்டுகளை கடந்தும் தகர்த்தெறிந்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக தோன்றிய த்ரிஷா அடுத்து தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப் போகிறார். அஜித்தின் 62 படத்திற்கும் த்ரிஷாவை ஹீரோயினாக புக் செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்னமும் சிங்கிள்
1983ம் ஆண்டு மே 4ம் தேதி பிறந்த நடிகை த்ரிஷாவுக்கு தற்போது 39 வயதாகிறது. 19 வயதில் சினிமாவில் அறிமுகமான த்ரிஷா 20 ஆண்டுகள் முழுவதும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இன்னமும் நடிகை த்ரிஷா திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா, ஹன்சிகா எல்லாம் திருமணம் செய்து கொண்ட நிலையில், த்ரிஷாவும் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











