Don't Miss!
- News
இந்து மக்கள் கட்சியின் "சனாதன எழுச்சி பேரணி".. அனுமதிக்க முடியாது.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
லைவ் லொகேஷன் கேட்ட கார்த்தி.. த்ரிஷாவின் ஸ்மார்ட்டான பதிலடி.. நல்லா பண்றாங்கய்யா புரமோஷன்!
சென்னை: நீண்ட நாள் காத்திருப்புக்கு நாளை முடிவு வந்து விடும் என்பது போல பொன்னியின் செல்வன் டீசர் நாளை மாலை 6 மணிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.
Recommended Video
அந்த அந்த மொழியில் உள்ள ஜாம்பவான் நடிகர்களை கொண்டு பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் டீசரை வெளியிட லைகா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் வந்தியத்தேவன் கார்த்தியும் குந்தவை த்ரிஷாவும் சோஷியல் மீடியாவில் ரொமான்ஸ் செய்து வருகின்றனர்.
இந்தியில்
அமிதாப்..
மலையாளத்தில்
மோகன்லால்..
அப்போ
தமிழில்
ரஜினியா?
பொன்னியின்
செல்வன்
எதிர்பார்ப்பு

குந்தவையாக த்ரிஷா
ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நடிகர்களின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியான நிலையில், இன்று ஜெயம் ரவியின் பொன்னியின் செல்வன் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு த்ரிஷாவின் குந்தவை போஸ்டர் வெளியானது சற்றே ஏமாற்றத்தை அளித்தாலும், குந்தவை போஸ்டரை கொண்டாட ஆரம்பித்தனர்.

லைவ் லொகேஷன்
அந்த
போஸ்டரை
மேலும்,
பூஸ்ட்
அப்
செய்யும்
விதமாக
நடிகர்
கார்த்தி
தனது
ட்விட்டர்
பக்கத்தில்,
"இளவரசி
Please
send
me
live
location,
உங்கள்
அண்ணனின்
ஓலையை
drop
off
பண்ணனும்!"
என
வந்தியத்தேவன்
கதாபாத்திரத்திலேயே
ஒன்றிப்
போய்
கிண்டலாக
போட்ட
ட்வீட்
ரசிகர்களின்
கவனத்தை
வெகுவாக
கவர்ந்தது.
எங்களுக்கும்
லைவ்
லொகேஷன்
ஷேர்
பண்ணுங்க
கார்த்தி,
நாங்களும்
த்ரிஷாவை
பார்க்கணும்
என
ரசிகர்களும்
கமெண்ட்
செய்திருந்தனர்.

த்ரிஷாவின் நச் பதிலடி
கார்த்தியின் ட்வீட்டை தாமதமாக பார்த்த நடிகை த்ரிஷா தற்போது அதற்கு செம ஸ்மார்ட்டாக பதில் போட்டு பதிலடி கொடுத்துள்ளார். நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில், "Sorry அரண்மனையில் smart phones and smart people not allowed." என பதிவிட்டுள்ள நிலையில், இதற்கு கார்த்தி என்ன பதில் ட்வீட் போடப் போகிறார் என்பதை பார்க்கவே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

லொகேஷனை சொல்லீட்டிங்களே
அரண்மனையில் இருக்கிறேன் என இப்படி ஓப்பனாக லொகேஷனை சொல்லி மாட்டிக்கிட்டீங்களே குந்தவை, வந்தியத்தேவன் கெட்டிக்காரன் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டான் என த்ரிஷாவின் ட்விட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நாளை நடைபெற உள்ள பொன்னியின் செல்வன் டீசர் நிகழ்ச்சியில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்கள் ராஜ உடையிலேயே வருகை தரப் போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.