»   »  நடிகை த்ரிஷாவுக்கு யுனிசெஃப் அமைப்பு தந்துள்ள புதிய அங்கீகாரம்!

நடிகை த்ரிஷாவுக்கு யுனிசெஃப் அமைப்பு தந்துள்ள புதிய அங்கீகாரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
த்ரிஷாவுக்கு யுனிசெஃப் அமைப்பு தந்துள்ள புதிய அங்கீகாரம்!- வீடியோ

சென்னை: ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃபின் பிரபல தூதராக (Celebrity Ambassador) நடிகை த்ரிஷா நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகளின் கல்வி உரிமைக்காக அவர் இனி குரல் கொடுப்பார்.

நடிகை த்ரிஷா நடிப்பு மட்டுமின்றி சமூக சேவைகளிலும் நாட்டம் காட்டி வருகிறார். விலங்குகள் நலன், குழந்தைகள் கல்வி போன்றவற்றுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கிறார்.

தட்டம்மை விளம்பரம்

தட்டம்மை விளம்பரம்

அண்மையில் கேரள அரசும் யுனிசெஃப் நிறுவனமும் இணைந்து தயாரித்த, குழந்தைகளுக்கு தட்டம்மை ஊசி போட வலியுறுத்தும் விளம்பரத்தில் த்ரிஷா தோன்றி நடித்தார்.

யுனிசெஃபின் பிரபல தூதர்

யுனிசெஃபின் பிரபல தூதர்

இதனைத் தொடர்ந்து த்ரிஷாவின் சமூக ஈடுபாட்டுக்கு அங்கீகாரம் தரும் வகையில் 'யுனிசெஃபின் பிரபல தூதர்' என்ற பதவியை அவருக்கு வழங்கியுள்ளனர். இந்த பதவியில் இருந்தபடி அவர் குழந்தைகள் கல்வி, குழந்தைத் திருமண முறை, குழந்தைத் தொழிலாளர் முறை, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் போன்றவற்றை எதிர்த்துக் குரல் கொடுப்பார்.

ரோல் மாடல்

ரோல் மாடல்

த்ரிஷாவை யுனிசெஃப் தூதராக அறிவிக்கும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய யுனிசெஃபின் தமிழக - கேரள தலைமை நிர்வாகி ஜாப் ஜக்காரியா, "வளரும் தலைமுறை இளைஞர்களுக்கு த்ரிஷா ஒரு ரோல் மாடலாகத் திகழ்கிறார். வீடுகளிலும் சமூகத்திலும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும், குழந்தைகளின் கல்வி உரிமைக்காவும் குரல் கொடுக்கும் வலிமை அவருக்குள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் பிரச்சினைகளுக்காக அவர் குரல் கொடுப்பார்," என்றார்.

அங்கீகாரம்

அங்கீகாரம்

நிகழ்ச்சியில் பங்கேற்ற த்ரிஷா பேசுகையில், "இது எனக்குப் பெரிய கவுரவம். தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வி, சுகாதாரம், குழந்தைகள் பாதுகாப்புக்காக தொடர்ந்து நான் குரல் கொடுப்பேன். பெண் குழந்தைகள் 18 வயது வரை கட்டாயம் கல்வி பயின்றால் குழந்தை திருமண முறையை ஒழித்துவிடலாம்," என்றார்.

முதல் நடிகை

முதல் நடிகை

தென்னிந்திய சினிமாவிலிருந்து ஒரு நடிகை யுனிசெஃப் அமைப்பின் இந்த அங்கீகாரத்தைப் பெறுவது இதுவே முதல் முறை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 64 படங்களில் நடித்துள்ள த்ரிஷாவுக்கு முதல் முறையாக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

English summary
South Indian film star Trisha Krishnan was conferred the UNICEF celebrity advocate status here today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil