»   »  மீண்டும் டோலிவுட்டுக்கு போகும் த்ரிஷா!

மீண்டும் டோலிவுட்டுக்கு போகும் த்ரிஷா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகை த்ரிஷா 'சதுரங்க வேட்டை -2' படத்தின் மூலம் மீண்டும் தெலுங்கு சினிமாவுக்குச் செல்லவிருக்கிறார்.

த்ரிஷா தற்போது 'மோகினி', 'கர்ஜனை', அர்விந்த்சாமியுடன் 'சதுரங்க வேட்டை -2', விஜய் சேதுபதியுடன் '96' போன்ற பல படங்களில் நடித்துவருகிறார். அவர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'மோகினி', 'கர்ஜனை' படங்கள் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து ரிலீஸுக்குத் தயார்நிலையில் உள்ளன.

Trisha goes back to tollywood

அர்விந்த்சாமியுடன் இணைந்து நடித்த 'சதுரங்க வேட்டை -2' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்துவிட்டன. அப்படத்தின் தெலுங்கு டப்பிங் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப் படமும் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் வெளியாகும் அதே நாளிலேயே தெலுங்கிலும் 'சதுரங்க வேட்டை -2' படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம். இந்தப் படத்தில் நடித்திருக்கும் அர்விந்த்சாமி, த்ரிஷா, பிரகாஷ்ராஜ், நாசர் ஆகியோருக்கு தெலுங்கு சினிமாவில் ஓரளவு நல்ல மார்க்கெட் இருக்கிறது.

Trisha goes back to tollywood

த்ரிஷா ஏற்கெனவே, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் என்பதால் இந்தப் படம் அவருக்கு ப்ரேக்காக அமையலாம். 'நாயகி' படத்திற்குப் பிறகு தெலுங்கில் இது ஒரு நல்ல என்ட்ரியாக அமையும் என எதிர்பார்க்கிறாராம் த்ரிஷா.

English summary
Actress trisha ready to go back to tollywood by the movie 'Sathutranga vettai 2'. Which is releasing on tamil and telugu a same day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil