»   »  'இதை எப்படி சாப்பிடுவேன்..?' - த்ரிஷாவை உருகவைத்த ஹோட்டல் நிர்வாகம்!

'இதை எப்படி சாப்பிடுவேன்..?' - த்ரிஷாவை உருகவைத்த ஹோட்டல் நிர்வாகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவா : த்ரிஷா முதன்முதலாக மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ள படம் 'ஹே ஜூட்'. மலையாளத் திரையுலகின் இளம் முன்னணி ஹீரோவான நிவின்பாலி தான் இந்தப் படத்தின் நாயகனாக நடிக்கிறார்.

இதில் த்ரிஷா கிறிஸ்தவப் பெண்ணாக நடிக்கிறாராம். இந்தப்படத்தை ஷ்யாம் பிரசாத் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே, நிவின்பாலி, ப்ருத்விராஜ் இருவரும் இணைந்து நடித்த 'இவிடே' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trisha got surprised by hotel management

அழகான காதல் கதையாக இந்தப்படம் உருவாகிறதாம். கோவாவைச் சுற்றியே இதன் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது என்பதால் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அப்படி சமீபத்தில் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள கோவாவுக்குச் சென்ற த்ரிஷாவை அவர் வழக்கமாகத் தங்கும் ஹோட்டல் நிர்வாகம் இன்பஅதிர்ச்சி தரும் விதமாக வரவேற்றுள்ளது.

த்ரிஷாவின் 'கொடி' படம், க்ளாப் போர்டு, சினிமா ரீல் என சில சினிமா உபகரணங்களை உள்ளடக்கி த்ரிஷாவுக்கென்றே ஒரு ஸ்பெஷல் கேக்கை தயார்செய்து த்ரிஷாவை வரவேற்றார்களாம். இதை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். 'இந்த கேக்கை சாப்பிடுற இதயம் எனக்கு இல்லையே' என அந்த கேக்கின் அழகைப் புகழ்ந்துள்ளார்.

English summary
Trisha make her debut in Malayalam by the film 'Hey Jude'. The shooting of this film is going on in Goa. Trisha has been welcomed by the Hotel Management.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil