»   »  நயன்தாராவை வீழ்த்திய ஜி.வி.பிரகாஷ் இருவருக்கும் "டப்" கொடுக்கும் ஜெயம் ரவி

நயன்தாராவை வீழ்த்திய ஜி.வி.பிரகாஷ் இருவருக்கும் "டப்" கொடுக்கும் ஜெயம் ரவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ஜி.வி.பிரகாஷின் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா திரைப்படம் சென்னை பாக்ஸ் ஆபிசில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

கடந்த வாரத்தில் வெளியான இத்திரைப்படம் நயன்தாராவின் "மாயா" மற்றும் கவுண்டமணியின் "49 ஓ" திரைப்படங்களை வசூலில் வீழ்த்தி இந்த சாதனையைப் புரிந்துள்ளது.


கடந்த வாரத்தில் வெளியான திரைப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் மற்றும் ரசிகர்களின் வரவேற்பு ஆகியவற்றை இங்கே காணலாம்.


த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா

ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான இத்திரைப்படம் சென்னை பாக்ஸ் ஆபிசில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய இந்தப் படம் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளுடன் சென்னை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.கடந்த வாரம் 186 காட்சிகள் திரையிடப்பட்டு சுமார் 93.60 லட்சங்களை த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா வசூலித்து இருக்கிறது.மேலும் தமிழ்நாடு முழுவதும் சுமார் 10 கோடி வரை இந்தப் படம் வசூலித்திருப்பதாக கூறுகின்றனர்.
மாயா

மாயா

நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான மாயா திரைப்படம் சென்னை பாக்ஸ் ஆபிசில் 2 வது இடத்தைப் பிடித்திருக்கிறது. 180 காட்சிகள் திரையிடப்பட்டு சுமார் 86.58 லட்சங்களை வசூலித்திருக்கிறது மாயா. விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பைப் படம் பெற்றிருப்பதால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் இன்னும் அதிகரிக்கலாம் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.


தனி ஒருவன்

தனி ஒருவன்

நயன்தாராவின் மற்றொரு படமான தனி ஒருவன் திரைப்படம் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியாகி ஒரு மாதம் தாண்டியும் இன்னும் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் ஓடிக் கொண்டிருக்கிறான் தனி ஒருவன்.கடந்த வாரம் 108 காட்சிகள் திரையிடப்பட்டு 35 லட்சங்களை வசூலித்திருக்கிறது படம். மேலும் சென்னையில் மட்டும் இதுவரை சுமார் 5.64 கோடிகளை அள்ளியிருக்கிறது ஜெயம் ரவி - அரவிந்த் சாமியின் தனி ஒருவன்.
49 ஓ

49 ஓ

நகைச்சுவை மன்னர் என்று போற்றப்படும் கவுண்டமணியின் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த 49 ஓ திரைப்படம் 54 காட்சிகள் திரையிடப்பட்டு 6.38 லட்சங்களை வசூலித்திருக்கிறது.


பா.விஜயின் ஸ்ட்ராபெரி

பா.விஜயின் ஸ்ட்ராபெரி

ஸ்ட்ராபெரி திரைப்படம் 2 வது வாரத்தில் 30 காட்சிகள் திரையிடப்பட்டு 3.04 லட்சங்களை வசூலித்திருக்கிறது.


75வது நாளில் பாகுபலி

75வது நாளில் பாகுபலி

பாகுபலி திரைப்படம் இன்று வெற்றிகரமான 75 வது நாளில் அடியெடுத்து வைத்திருக்கிறது. 11 வது வாரத்தில் 15 காட்சிகள் திரையிடப்பட்டு 1.28 லட்சங்களை வசூலித்து இருக்கிறது. மேலும் சென்னையில் மட்டும் இதுவரை தமிழ், தெலுங்கு 2 மொழிகளிலும் சேர்த்து 8.26 கோடிகளை வசூலித்திருக்கிறது ராஜமௌலியின் பாகுபலி.


யட்சன்

யட்சன்

ஆர்யா - கிருஷ்ணா நடிப்பில் வெளியான யட்சன் திரைப்படம் இதுவரை மொத்தமாக 91.84 லட்சங்களை சென்னை பாக்ஸ் ஆபிசில் வசூலித்துள்ளது.
பாயும் புலி

பாயும் புலி

விஷால் - காஜல் அகர்வால் நடிப்பில் செப்டெம்பர் முதல் வாரத்தில் வெளியான பாயும்புலி திரைப்படம் சென்னை பாக்ஸ் ஆபிசில் இதுவரை 1.66 கோடிகளை வசூலித்திருக்கிறது.


நயன்தாரா பாக்ஸ் ஆபிஸின் ராணியாக மாறிவிட்டார் போல....English summary
Box office collection: 'Trisha Illana Nayanthara' beats 'Maya' in first weekend in Chennai; 'Thani Oruvan' doing well"Trisha Illana Nayanthara" has topped the chart at the Chennai box office beating Nayantara's supernatural-thriller "Maya". This comes as a surprise to many as the Nayantara movie had got better reviews than GV Prakash's film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil