»   »  காதலர் தினத்தன்று சத்தமில்லாமல் ஒரு வேலை பார்த்த த்ரிஷா

காதலர் தினத்தன்று சத்தமில்லாமல் ஒரு வேலை பார்த்த த்ரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

பீட்டா பிரச்சனை பூதாகரமாக வெடித்ததால் ட்விட்டரை விட்டு வெளியேற த்ரிஷா மீண்டும் வந்துள்ளார்.

விலங்குகள் பிரியையான த்ரிஷா பீட்டா உறுப்பினர் என்று கூறி சர்ச்சை வெடித்தது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகமே போராடிக் கொண்டிருந்தபோது அவர்களின் கோபம் த்ரிஷா மீது திரும்பியது.

நான் பீட்டாவில் இல்லை, ஜல்லிக்கட்டுக்கு எதிராக எதுவும் கூறவில்லை என்று த்ரிஷா கூறியும் யாரும் கேட்கவில்லை. அவரது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் ட்விட்டரில் இருந்தே வெளியேறினார். தற்போது ஜல்லிக்கட்டு பிரச்சனை அடங்கி தமிழக அரசியல் பக்கம் மக்களின் கவனம் திரும்பியுள்ளது.

24 மணிநேரமும் பிரேக்கிங் நியூஸாக போட்டு எப்பொழுதும் மக்கள் பரபரப்பாக உள்ள நிலையில் த்ரிஷா காதலர் தினத்தன்று மீண்டும் ட்விட்டருக்கு வந்துள்ளார். அவர் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிக்கும் 96 படம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

Trisha is back on twitter
English summary
Actress Trisha who left twitter over PETA issue is back. Though Trisha cleared her stand about PETA, nobody was ready to believe her.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil