Don't Miss!
- News
‛ஜெயிட்டோம் மாறா’.. காஷ்மீரில் முடிந்த பாரத் ஜோடோ யாத்திரை..ராகுல் போட்ட நெகிழ்ச்சி பதிவு! என்ன?
- Sports
99 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து.. செம பதிலடி கொடுத்த இந்தியா.. கொத்தாக விழுந்த விக்கெட்டுகள்
- Finance
மீண்டும் இப்படி ஒரு பிரச்சனையா.. மாருதி சுசூகி கவலை.. இனி என்ன செய்ய போகிறதோ?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
நண்டு இழுக்குற கதையா மாறிடும்..காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்காதது குறித்து த்ரிஷா பளிச்!
சென்னை: நடிகை நயன்தாராவுடன் தமன்னா, சமந்தா உள்ளிட்ட நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர். ஆனால், த்ரிஷாவும் நயன்தாராவும் இதுவரை இணைந்து நடித்ததில்லை.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் முதலில் சமந்தாவுக்கு பதில் த்ரிஷா தான் விக்னேஷ் சிவன் மனதில் இருந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இந்த வாரம் ராங்கி படத்தின் ரிலீஸை முன்னிட்டு பேட்டியளித்த நடிகை த்ரிஷாவிடம் நயன்தாராவுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைந்து நடிக்காதது ஏன் என்கிற கேள்விக்கு அவர் அதிரடியாக பதில் அளித்துள்ளார்.
நாளுக்கு
நாள்
மோசம்...
நடிப்பில்
இருந்து
ஓய்வு?:
சமந்தா
அதிர்ச்சி
முடிவு...
கவலையில்
ரசிகர்கள்!

இருவருமே 20 வருஷம்
த்ரிஷா மற்றும் நயன்தாரா இருவருமே சினிமாவில் கடுமையான போட்டிகளை சந்தித்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளனர். இருவருமே கிட்டத்தட்ட 20 வருஷங்கள் சினிமாவில் டாப் நடிகைகளாக அசத்தி வருகின்றனர். ஆனால், இருவருக்கும் இடையே இதுவரை பெரியளவிலான நட்பு எதுவுமே இருந்ததில்லை. இருவருக்கும் இடையே பிரச்சனை நிலவி வருகிறது என பல ஆண்டுகளாக பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் த்ரிஷா அது குறித்து ஓபனாக பேசி உள்ளார்.

ஆரோக்கியமான போட்டியா இருக்காது
இரண்டு
டாப்
ஹீரோயின்கள்
இணைந்து
நடித்தால்
அது
ஆரோக்கியமான
போட்டியாக
இருந்தால்
நல்லது.
ஆனால்,
இங்கே
அப்படி
நடக்க
வாய்ப்பே
இல்லை.
ஒரு
நடிகையோட
ரசிகர்கள்
இன்னொரு
ரசிகையை
புல்
டவுன்
பண்ணத்தான்
நினைப்பாங்க
என
த்ரிஷா
கூறியுள்ளார்.

வேண்டாம்னா வேண்டாம் தான்
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க வேண்டாம்னு நான் முடிவு பண்ணேன்னா அதற்கு ஒரு காரணம் இருக்கும். நோ சொல்றதுக்கே சரியான யோசனை வேணும்ல அதைத்தான் நான் செஞ்சேன்னு நினைக்கிறேன். நடிகைகள் அதிகம் சேர்ந்து பழகுவதற்கான சூழலே சினிமாவில் இல்லைன்னு நினைக்கிறேன். பொன்னியின் செல்வன் மாதிரியான படங்களில் பல நடிகைகளுடன் இணைந்து நடிக்கும் போது தான் அதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்குதுன்னு நினைக்கிறேன்.

நண்டு கதை
எங்க ஹீரோயின் தான் நல்லா நடிச்சாங்க என்றும் இல்லை எங்க ஹீரோயின் தான் சூப்பர் என ரசிகர்கள் நண்டு கதை போல ஒருத்தரை ஒருத்தர் கீழே இழுத்துத் தள்ளி விட்டு ஒருமாதிரி கஷ்டமா போயிடும். அதனால் தான் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கவில்லை என த்ரிஷா கூறியுள்ளார்.

சமந்தா தான் சூப்பர்
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன் சமந்தா இணைந்த நடித்த நிலையிலும், சமந்தாவின் கதீஜா கதாபாத்திரம் தான் சூப்பர் என்றும் கண்மணி vs கதீஜா ஹாஷ்டேக்குகளும் சோஷியல் மீடியாவில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் படம் இந்த ஆண்டு த்ரிஷாவுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிலையில், ஆண்டு இறுதியில் ராங்கி படத்தை இந்த வாரம் ரிலீஸ் செய்கிறார் த்ரிஷா.

பொன்னியின் செல்வன் 2 வருது
இன்று மாலை 4 மணியளவில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ் அப்டேட்டை வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நேற்று முதலே பொன்னியின் செல்வன் 2 படத்துக்கான அப்டேட்களை அடுக்கி வருகின்றன. குந்தவையாக த்ரிஷாவுக்கு பொன்னியின் செல்வன் 2 படத்திலும் ஏகப்பட்ட வேலைகள் உள்ளன.