»   »  "அடுத்த எம்.ஜி.ஆர். ஆவாரா ரஜினி முருகன்"... வம்பிழுக்கும் வருண் மணியன்!

"அடுத்த எம்.ஜி.ஆர். ஆவாரா ரஜினி முருகன்"... வம்பிழுக்கும் வருண் மணியன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி முருகன் படம் அடுத்த MGR ஆகுமா என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கொளுத்திப் போட்டு கோடம்பாக்கமே சூடாகிக் கிடக்க சில்லென்று குன்னூரில் சென்று குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார் வருண் மணியன்.

விஷால் நடித்த மதகஜராஜா படத்தின் சுருக்கமே MGR அந்தப் படம் இன்னும் வெளிவராமல் பெட்டிக்குள்ளே முடங்கிக் கிடக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.இந்த நிலையில், தொடர்ந்து இயக்குனர் லிங்குசாமியை தனது ட்விட்டர் பக்கத்தில் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கும் வருண் மணியன், மீண்டும் அவரை வாரியுள்ளார்.


மஞ்சப் பையுடன் வந்தவர் மஞ்சப் பையுடன் திரும்பிப் போகப் போகிறார் என்று சில நாட்களுக்கு முன்னால் கிண்டல் அடித்தவர், இப்போது சற்று காட்டமாக ரஜினிமுருகன் படம் ரிலீஸ் ஆகாது என்று கூறியிருக்கிறார்.


Trisha’s ex-boy friend to stop rajini murugan release

தமிழ் சினிமாவின் முன்னணி பைனான்சியாரான வருண் மணியன் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு பணம் கொடுத்து அது திரும்ப வராததால் லிங்குசாமி தயாரித்த உத்தமவில்லன் படத்தை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்ய முடியாமல் பெரிய பிரச்சினையை உண்டாக்கியவர்.


தற்போது ரஜினி முருகன் வாயிலாக மீண்டும் லிங்குசாமிக்கு பிரச்சினையை உண்டாக்க ரூம் போட்டு யோசித்து வருகிறார் போலும்.


ஏற்கனவே கோர்ட்டில் லிங்குசாமியின் தயாரிப்பில் உருவான உத்தமவில்லன் மற்றும் ரஜினி முருகன் படங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கேஸ் போட்டிருக்கும் வருண் சொன்னது போல முதல் படத்திற்கு தடையை உண்டாக்கி சொன்னதை செய்து காட்டி டென்ஷன் கொடுத்தார்.


அடுத்து ரஜினிமுருகனை வெளியிட முடியாமல் செய்ய எவ்வளவு தடைகளை உண்டாக்க போகிறாரோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.


த்ரிஷாவை மறக்க முடியாமல் அந்த கோபத்தை இப்படி எல்லோரிடமும் காட்டி வருகிறாரோ வருண்!


English summary
Varun Manian has financed Sivakarthikeyan’s Rajini Murugan but he is yet to get his money back from Lingusamy’s Thirrupathi brothers.Yesterday Varun Manian posted a Twitter status which says that Rajini Murugan will be the next Madha Gaja Raja and it will never release.
Please Wait while comments are loading...