»   »  த்ரிஷாவின் முன்னாள் காதலருக்கு விரைவில் டும் டும் டும்!

த்ரிஷாவின் முன்னாள் காதலருக்கு விரைவில் டும் டும் டும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ் சினிமாவில் வெற்றித் தயாரிப்பாளர்களில் ஒருவர் வருண் மணியன். இவர் இதுவரை ரேடியன் மீடியா சார்பில் 'வாயை மூடி பேசவும்', 'காவியத்தலைவன்' போன்ற படங்களைத் தயாரித்திருக்கிறார்.

தொழில் அதிபரான இவர் நடிகை திரிஷாவை காதலித்து அவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். பின்னர் திடீரென இந்தத் திருமணம் நின்றுவிட்டது.

இந்த நிலையில் வருண் மணியன், கனிகா குமரன் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளது.

த்ரிஷா காதல் :

த்ரிஷா காதல் :

தெலுங்கு நடிகர் ராணாவுடனான காதல் முறிந்தபிறகு நடிகை த்ரிஷா தயாரிப்பாளர் வருண் மணியனைக் காதலித்தார். இருவரும் கடந்த 2015-ம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். தங்களது திருமணம் விரைவில் நடைபெற இரு்பபதாக அப்போது தெரிவித்தனர்.

காதல் முறிவு :

காதல் முறிவு :

நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு இவர்களது காதல் திடீரென முறிந்தது. அதன்பிறகு, த்ரிஷா சில படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.

முன்னாள் காதலர்களின் அடுத்தடுத்த காதல் :

முன்னாள் காதலர்களின் அடுத்தடுத்த காதல் :

த்ரிஷாவுடனான நெருக்கத்திற்குப் பிறகு ராணா, நடிகைகள் ஸ்ரேயா, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் ஆகியோருடன் கிசுகிசுக்கப்பட்டார். வருண் மணியன் கனிகா குமரன் என்பவரைக் காதலிப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

யார் இவர் ? :

யார் இவர் ? :

வருண் மணியனின் காதலி கனிகா குமரன் மறைந்த முன்னாள் அமைச்சர் கே.பி. கந்தசாமியின் பேத்தி ஆவார். இவர்களது திருமணம் அக்டோபர் மாதம் சென்னையில் நடக்க இருக்கிறது.

English summary
Varun Manian, one of the producers in Tamil cinema is reportedly getting married to Kanika Kumaran soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil