Raangi Twitter Review : ராங்கியாக த்ரிஷா ஜெயித்தாரா? தோற்றாரா? ட்விட்டர் விமர்சனம்!

சென்னை : எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களை இயக்கிய எம்.சரவணன் ராங்கி படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில், த்ரிஷா லீட்ரோலில் நடித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார்.

இப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. த்ரில்லர் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தை பார்த்த ரசிகரிகளின் ட்விட்டர் விமர்சனம் இதோ

ராங்கி படத்தின் கதை

ராங்கி படத்தின் கதை

ராங்கி படத்தில் நடிகை த்ரிஷா துணிச்சல் கொண்ட பத்திரிக்கையாளராக தையல் நாயகி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு இளம் பெண் ஒருவருடன் முகநூல் பக்கத்தில் சாட் செய்கிறார். அந்த பெண்ணுக்கு அவன் தீவிரவாதி என்று தெரியாது. அந்த பெண் பயன்படுத்தும் டிபி போட்டோ, த்ரிஷாவின் அண்ணன் மகளின் போட்டோ. போலி போட்டோவை வைத்து நடக்கும் இந்த சாட் விவகாரம் த்ரிஷாவுக்கு தெரியவர அதன் பிறகு நடக்கும் சுவாரஸ்யம் தான் ராங்கி திரைப்படத்தின் கதை .

ஒன் லைன் ஓகே தான்

ஒன் லைன் ஓகே தான்

ராங்கி படத்தை ஒன் லைனாக பார்க்கும்போது கதை பரபரப்பாக தெரிகிறது; ஆனால் காட்சிகளை பார்க்கும் போதும் நியாயமற்றவை. த்ரிஷா ஒரு ஜேம்ஸ்பாண்ட்டாக நடித்திருக்கிறார். ஆனால், இது அவருக்கு பொருந்தவில்லை. ஆலிமாவாக நடித்த டாட் என்ற சிறுவன் சிறப்பாக நடித்துள்ளார். காட்சிகளிலும் சரி. தீவிரவாத முகநூல் அரட்டைக் காட்சி மற்றும் துனிசியாவின் அதிரடி காட்சிகள் சீரியஸாக இல்லாமல் வேடிக்கையானதாக உள்ளது . செம மொக்கா என பதிவிட்டுள்ளார்.

ஓர் நல்ல அனுபவம்

ஓர் நல்ல அனுபவம்

த்ரிஷாவின் தீவிர ரசிகரான ஒரு நெட்டிசன்ஸ் முதல் பாதி அருமையாக உள்ளது. த்ரிஷா படத்தில் அதிரடியாக நடித்துள்ளார். ராங்கி திரைப்படத்தின் செகண்ட் ஆஃபுக்காக காத்திருக்கிறேன். இந்த படம் ஓர் நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது என ஒரு ரசிகர் பகிர்ந்துள்ளார்.

த்ரிஷா டி ஷர்ட் அணிந்து

த்ரிஷா டி ஷர்ட் அணிந்து

ராங்கி படத்தில் பல ஆக்ஷன் காட்சிகள் உள்ளன இதில் த்ரிஷா டூப்பே இல்லாமல் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் த்ரிஷாவுக்கு ஜோடியே இல்லாததுதான் வருத்தமாக உள்ளது. ராங்கி படம் பார்க்க வந்த ரசிகர்கள் Trishians tshirt அணிந்திருந்தனர். ரோகினி திரையரங்கின் காஃபி உண்மையில் மிகவும் ஆறுதலாக உள்ளது என காஃபியை விளம்பரப்படுத்தி உள்ளார்

ரசிகர்களுடன் படம் பார்த்த த்ரிஷா

ரசிகர்களுடன் படம் பார்த்த த்ரிஷா

நடிகை த்ரிஷா ராங்கி திரைப்படத்தை கோயம்போது ரோகினி திரையரங்கில் ரசிகர்களோடு ரசிகர்களாக இணைந்து படத்தைப்பார்த்துள்ளார். இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு பதிலளித்தார் திரிஷா. அப்போது ஆக்ஷன் சாட்சியில் டூப்பே இல்லாமல் நடித்ததை அனைவரும் பாராட்டினார்கள். மேலும் தளபதி 67 திரைப்படம் பற்றிய கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X