For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ராங்கியா...டிரைவர் ஜமுனாவா...இந்த வாரம் திரையரங்கில் மோத உள்ள படங்கள் !

  |

  சென்னை : திரையரங்கில் படம் பார்ப்பது என்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். அதுவும் மனதிற்கு பிடித்த ஹீரோக்களின் படம் வெளியாகிறது என்றால், விசில் சத்தமும், கைத்தட்டலும் சும்மா அப்படி இருக்கும்.

  அப்படி வாரா வாரம் ஆரவாரத்துடன் படங்கள் வெளியாகி வருகின்றன. கடந்த வாரம் கனெக்ட், லக்தி என இரண்டு படங்களே வெளியாகின.

  இந்த வாரம் திரையரங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த டிரைவர் ஜமுனா, ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.

  பீட்ஸாவுடன் கோக் குடித்த துல்கர் சல்மான் டிரைவர்.. பரிதாப மரணம்.. நள்ளிரவில் நடந்தது என்ன?பீட்ஸாவுடன் கோக் குடித்த துல்கர் சல்மான் டிரைவர்.. பரிதாப மரணம்.. நள்ளிரவில் நடந்தது என்ன?

  ராங்கி

  ராங்கி

  எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் எம்.சரவணன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ராங்கி. தனக்கே உரித்தான வசீகரமான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை த்ரிஷா இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தணிக்கைக்குழு இப்படத்தில் இருந்து 30 காட்சிகளை நீக்கி விட்டு படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் கொடுத்துள்ளது. இத்திரைப்படம் டிசம்பர் 30ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

  டிரைவர் ஜமுனா

  டிரைவர் ஜமுனா

  வத்திக்குச்சி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் டிரைவர் ஜமுனா. இந்த படத்தில் ஆடுகளம் நரேன், ஸ்ரீ ரஞ்சனி, ராஜாராணி' பட புகழ் பாண்டியன், பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து படம் வருகிற டிசம்பர் 30-ம் தேதி வெளியாக உள்ளது.

  கோவை சரளாவின் செம்பி

  கோவை சரளாவின் செம்பி

  கோவை சரளா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் செம்பி. இயக்குனர் பிரபு சாலமன் காடன் படத்திற்குப் பிறகு இப்படத்தை இயக்கி உள்ளார். இதில், அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 30ந் தேதி வெளியாக உள்ளது. கடந்த வாரம் வெளியான இப்படத்தின் டிரைலரைப் பார்த்த ரசிகர்கள் கோவை சரளாவுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என அவரது நடிப்பை புகழ்ந்துள்ளனர்.

  ஓ மை கோஸ்ட்

  ஓ மை கோஸ்ட்

  ஓ மை கோஸ்ட் திரைப்படம் வருகிற டிசம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குனர் யுவன் இயக்கத்தில் கவர்ச்சி புயல் நடிகை சன்னி லியோன் இப்படத்தில் பேயாக நடிக்கிறார். இதில், சதீஷ், தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, ரமேஷ் திலக், ஜி.பி.முத்து உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். நகைச்சுவை திரைப்படமான இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

  கொடை

  கொடை

  எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராஜா செல்வம் இயக்கத்தில் வளரும் இளம் திறமையாளர்களின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ள படம் கொடை. இப்படத்தில் கார்த்திக் சிங்கா கதாநாயகனாக நடிக்க, அனயா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்ற நட்சத்திர நடிகர்களில் ரோபோ சங்கர், எம்.எஸ். பாஸ்கர், மாரிமுத்து, சிங்கமுத்து, அஜய் ரத்தினம், போஸ் வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.

  மாலிகாபுரம் (மலையாளம்)

  மாலிகாபுரம் (மலையாளம்)

  மாலிகாபுரம் படத்தின் தலைப்பிற்கு ஏற்றாற்போல், சபரிமலை பெண் பக்தரை மையமாக் கொண்ட திரைப்படம் இதுவாகும். கற்பனையான கதை அம்சத்தைக் கொண்ட இப்படத்தை அமலா பாலின் கடாவர் படத்திற்கு வசனம் எழுதிய அபிலாஷ் பிள்ளை இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். சைஜு குருப், டிஜி ரவி, மனோஜ் கே ஜெயன், ரமேஷ் பிஷாரடி, சம்பத் ராம், ஸ்ரீபாத் மற்றும் ஆல்ஃபி பஞ்சிகரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.இப்படம் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.

  English summary
  Rangi, Driver Jamuna, Sembi, Oh my god, Kodai, this week theater release movie
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X