»   »  என்னை 'நாயகி' கதையை சொல்லவிடாமல் தடுத்த த்ரிஷா: இயக்குனர்

என்னை 'நாயகி' கதையை சொல்லவிடாமல் தடுத்த த்ரிஷா: இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: கதையை சொல்லத் துவங்கிய 5வது நிமிடத்திலேயே நாயகி படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்புக் கொண்டதாக இயனக்குனர் கோவர்தன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கோவர்தன் ரெட்டி இயக்கத்தில் த்ரிஷா நடித்துள்ள பேய் படம் நாயகி. படம் நாளை ரிலீஸாக உள்ளது. படத்தின் ஹீரோவே த்ரிஷா தானாம். அரண்மனை 2 படத்தை அடுத்து நாயகி படம் மூலம் வெற்றி காண நினைக்கிறார் த்ரிஷா.


இந்நிலையில் படம் குறித்து கோவர்தன் கூறுகையில்,


நாயகி

நாயகி

நாயகி படத்தின் கதையை எழுதத் துவங்கியபோது த்ரிஷாவை மனதில் வைத்து தான் எழுதினேன். நான் த்ரிஷாவின் தீவிர ரசிகன். என் படத்தில் த்ரிஷா ஹீரோ போன்று தெரிவார்.


32 கதைகள்

32 கதைகள்

நான் கதை சொல்வதற்கு முன்பு த்ரிஷா 32 கதைகள் கேட்டிருந்தார். நான் கதை சொல்லத் துவங்கிய 5வது நிமிடத்தில் நான் உங்கள் படத்தில் நடிக்கிறேன் என்று கூறிவிட்டார். கதையை முழுதாக கேளுங்க என்று நான் கூறியதற்கு அதெல்லாம் தேவை இல்லை என்றார்.


போட்டோஷூட்

போட்டோஷூட்

என் நம்பிக்கை மீது நம்பிக்கை வைத்து த்ரிஷா கதையை முழுவதுமாக கேட்கவில்லை. அதன் பிறகு போட்டோஷூட்டிற்கு முன்பு தான் அவரிடம் படத்தின் முழுக்கதையையும் கூறினேன்.


கனவு நனவானது

கனவு நனவானது

த்ரிஷாவுடன் சேர்ந்து பணியாற்றியது அருமையான அனுபவம். என் கனவு நனவானது என்றே கூற வேண்டும். அவரை ஒரு நாள் இயக்குவேன் என நினைக்கவில்லை. நான் முதலில் அவரை மேடம் என்று அழைத்தேன். அவரோ த்ரிஷான்னே கூப்பிடுங்க என்றார். இரண்டு மொழிகளில் வெளியாகும் ஒரு படத்தை 40 நாட்களில் முடிக்க த்ரிஷா தான் காரணம்.


பேய்

பேய்

என் படத்தில் பேயை பார்த்து நீங்கள் பரிதாபப்படுவீர்கள். இந்த படத்திற்காக த்ரிஷா தனது எடையை குறைத்தார். நாயகி போன்ற படத்தை இதற்கு முன்பு பார்த்திருக்க மாட்டீர்கள். இது ஒரு பேய் பழிவாங்கும் படம்.


English summary
Director Goverdhan Reddy said that Trisha stopped him from telling the story of Nayaki as she likes it immediately.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil