»   »  'அம்மா' ஜெயலலிதாவாக ஆசைப்படும் த்ரிஷா

'அம்மா' ஜெயலலிதாவாக ஆசைப்படும் த்ரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க ஆசைப்படுவதாக த்ரிஷா தெரிவித்துள்ளார்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக த்ரிஷா நடித்துள்ள கொடி படம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது. படத்தில் வில்லித்தனம் கலந்த அரசியல்வாதியாக நடித்துள்ளார் த்ரிஷா.

இந்நிலையில் த்ரிஷாவுக்கு புது ஆசை பிறந்துள்ளது.

ஜெயலலிதா

ஜெயலலிதா

வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என ஆசையாக உள்ளது. முதல்வர் ஜெயலலிதாவாக நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என த்ரிஷா தெரிவித்துள்ளார்.

அம்மா

அம்மா

த்ரிஷா நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசத் தவறுவது இல்லை. ஜெயலலிதாவின் கையால் வாங்கிய விருதை த்ரிஷா பொக்கிஷமாக கருதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒற்றுமை

ஒற்றுமை

ஜெயலலிதா அரசியலுக்கு வரும் முன்பு திரைத்துறையில் முன்னணி நடிகையாக இருந்தார். த்ரிஷாவும் ஜெயலலிதாவை போன்றே சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் படித்தவர்.

த்ரிஷா

த்ரிஷா

ஜெயலலிதாவாக நடிக்க த்ரிஷா ஆசைப்படுகிறார். அம்மாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் திட்டம் உள்ளவர்கள் த்ரிஷாவை அணுகலாம். த்ரிஷாவின் ஆசை நிறைவேறுமா?

English summary
Trisha wants to act in CM Jayalalithaa's biopic as the powerful lady of Tamil Nadu.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil