twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நல்லெண்ணத் தூதர்.. அடுத்து 'தலைவி' த்ரிஷாவா? - பதில் சொல்கிறார் த்ரிஷா

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    நல்லெண்ணத் தூதர்.. அடுத்து 'தலைவி' த்ரிஷாவா? - பதில் சொல்கிறார் த்ரிஷா- வீடியோ

    சென்னை : சமூக சேவை பணிகளில் ஈடுபடுவதால், அரசியலுக்கு வரப்போகிறேன் என்று நினைக்கக்கூடாது என நடிகை த்ரிஷா கோரிக்கை வைத்துள்ளார்.

    யுனிசெஃப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்திற்கான நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள த்ரிஷா நேற்று அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு நிருபர்களிடம் பேசினார்.

    சினிமா பற்றியும், குழந்தைகளுக்கான கல்வி பற்றியும் பேசிய த்ரிஷா, சமூக சேவையில் ஈடுபட்டுவருவதால் அரசியலுக்கு வரப்போகிறேன் என நினைக்கவேண்டாம் எனக் கூறியுள்ளார்.

    சினிமாவால் வாழ்கிறேன்

    சினிமாவால் வாழ்கிறேன்

    எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள யுனிசெஃப் தூதர் பதவியைப் பெருமையாகக் கருதுகிறேன். சினிமா எனக்கு நிறைய கொடுத்து இருக்கிறது. பதிலுக்கு இந்த சமூகத்துக்கு பணி செய்வதற்காகவே இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளேன். குழந்தைகள் கல்வி, நல்வாழ்வு, ஊட்டச்சத்து மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்.

    பிரசாரம் செய்வேன்

    பிரசாரம் செய்வேன்

    ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத, திறந்தவெளி மலம் கழித்தலற்ற தமிழகம் உருவாக்கும் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிப்பேன். 18 வயது வரை அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க வேண்டும். குழந்தை திருமணங்களை, குழந்தை தொழிலாளர்கள் முறைகளை தடுக்க பிரசாரம் செய்வேன்.

    பாலியல் கல்வி அவசியம்

    பாலியல் கல்வி அவசியம்

    பருவ வயதை அடைதல் மற்றம் அது தொடர்பான விஷயங்களை பெண் குழந்தைகள் அச்சத்துடன் பார்க்கிறார்கள். குட் டச் பேட் டச் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. அதனால் குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியம். எனவே பள்ளிகளில், மாணவ மாணவிகளுக்கு பாலியல் கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும்.

    நூலகம் வேண்டும்

    நூலகம் வேண்டும்

    புத்தகப் படிப்பு தவிர மற்ற விஷங்களை கற்றுத் தர வேண்டும். கண்டிப்பாக ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம் இருக்க வேண்டும். சினிமாவில், குழந்தைகளுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. அது தொடர்பாகவும் சில முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது.

    பள்ளிச் சீருடையில் காதல் காட்சிகள்

    பள்ளிச் சீருடையில் காதல் காட்சிகள்

    பள்ளிச் சீருடையில் மாணவ மாணவிகள் காதலிப்பது போன்ற காட்சிகள் இருக்க கூடாது என்றும் வற்புறுத்தப்படுகிறது. சினிமா என்பது நிஜமல்ல, சினிமாவில் மாணவர்கள் சீருடையில் காதலிப்பது போன்ற காட்சிகளை நகைச்சுவைக்காக வைக்கலாமே தவிர, அதை சீரியஸாக காட்டக்கூடாது. பாலின ஈர்ப்பு என்பது ஹார்மோன்களின் வேலை என்பதை உணர்த்த வேண்டும்.

    அரசியலுக்கு வரமாட்டேன்

    அரசியலுக்கு வரமாட்டேன்

    சமூக சேவை பணிகளில் ஈடுபடுவதால், அரசியலுக்கு வரப்போகிறேன் என்று நினைக்ககூடாது. அரசியல் என்பது பெரிய விஷயம். அது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அந்த மாதிரியான சிந்தனை எதுவும் எனக்கு இல்லை.' என நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.

    English summary
    Actress Trisha has been appointed as UNICEF's Goodwill Ambassador for Tamil Nadu and Kerala. Trisha has requested, 'Not to think of me going to politics because I am engaged in social service work'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X