»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகை த்ரிஷாவின் இன்டர்நெட் குளியல் காட்சிகள் விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு நடிகர் சங்கத் தலைவர்விஜயகாந்த்திடம் த்ரிஷாவின் தாயார் உமா புகார் கொடுத்துள்ளார்.

த்ரிஷா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் குளிப்பது போன்ற காட்சிகள் அடங்கிய படங்கள் இணைய தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஹைதராபாத் மாநகர காவல்துறை ஆணையரிடம் த்ரிஷா புகார் கொடுத்துள்ளார். சென்னையைச் சேர்ந்தவரான த்ரிஷா,சென்னை மாநகர காவல்துறையிடம் புகார் தரவில்லை.

இதை வைத்துப் பார்க்கையில் ஹைதாராபாத் ஹோட்டலில் வைத்துத் தான் த்ரிஷாவை யாரே படம் பிடித்திருக்கிறார்கள் என்றுசந்தேகப்படுகிறார்கள் கோடம்பாக்கத்தில் சிலர். அதே நேரத்தில் ஹைதாராபாத் போலீசில் தந்துள்ள புகாரில் கூட தன்னைப் படம்எடுத்ததாக த்ரிஷா கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷாவைப் போலேவே இருக்கும் ஒரு பெண்ணை வைத்து படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டிருக்கிறார்கள் என்று தான் அவரதுஅம்மாவும் சொல்கிறார்.

த்ரிஷா புகார் தராவிட்டாலும் கூட சென்னை நகர கமிஷ்னரும் இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந் நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த்திடம் த்ரிஷாவின் அம்மா உமா ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில், சிலருடைய சதி வேலை காரணமாக த்ரிஷாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடிகர் சங்கம்உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil