»   »  ரஜினியின் காலா தலைப்புக்கு சிக்கல்... பஞ்சாயத்து ஆரம்பிச்சிருச்சி!

ரஜினியின் காலா தலைப்புக்கு சிக்கல்... பஞ்சாயத்து ஆரம்பிச்சிருச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்னடா ரஜினி படம் அறிவிச்சி2 நாளாகியும் இன்னும் யாரும் ஏழரையைக் கூட்டலியேன்னு பார்த்தா... தோ வந்துடுச்சி. காலா என்ற அந்த தலைப்புக்கு இன்னொரு தயாரிப்பாளர் உரிமை கோரி பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தலைப்புக்காக கட்டி உருளுவது ரொம்பவே வாடிக்கையாகிவிட்டது.


Trouble for Rajini's Kaala title

காரணம் தலைப்பைப் பதிவு செய்வதில் உள்ள குழப்பம். தயாரிப்பாளர் சங்கம், பிலிம்சேம்பர் மற்றும் கில்டு ஆகிய மூன்று அமைப்புகளில் தலைப்புகளைப் பதிவு செய்யலாம். கில்டு அமைப்பில் டைட்டில் பதிவு சல்லிசாக முடிந்துவிடும் என்பதால், ஏகப்பட்ட பேர் அங்கே போய்விடுகிறார்கள்.


இந்தத் தலைப்புகளை இறுதி செய்யும் போது, ஆட்சேபணை இல்லா சான்று பெறுவது அவசியம்.


இந்த காலா தலைப்பையும் ஒரு தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்து வைத்திருக்கிறார். இதை உறுதி செய்யாமலேயே தனுஷுக்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டது விஷால் தலைமயிலான தயாரிப்பாளர் சங்கம். இதுதான் சிக்கலுக்கு காரணம்.


ஆனால் காலா கரிகாலன் என்பதுதான் படத்தின் முழு தலைப்பும் என்பதால், அதைச் சொல்லி விஷயத்தை முடித்துவிடுவது சாத்தியமே.


முன்பு விஜய்யின் துப்பாக்கி படம் வெளியாகும் தருணத்தில், கள்ள துப்பாக்கி என்ற தலைப்பைக் காட்டி நீதிமன்றம் வரை போனார்கள். கடைசியில் துப்பாக்கி வேறு, கள்ள துப்பாக்கி வேறு என்று தீர்ப்பு வந்தது நினைவிருக்கலாம்.

English summary
Rajinikanth's Kala title in crisis as one producer claiming the title rights.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil