»   »  றெக்க-க்கு வருமோ சிக்கல்?

றெக்க-க்கு வருமோ சிக்கல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்த தொடரி படமும், காக்கமுட்டை இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை படமும் கடந்த வாரம் வெளியாகின.

இரண்டு படங்களும் கலவையான, எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றன. இதில் முதல் நாளே படுத்துவிட்டது தொடரி. அடுத்தடுத்த நாட்களிலும் பெரிய முன்னேற்றமில்லை. திங்கள் முதல் சுத்தம்!


Trouble for Rekka?

ஆண்டவன் கட்டளை நல்லாயிருக்கு என மக்கள், மீடியாக்கள் கூறினாலும், புரமோஷனில் கோட்டை விட்டதால் வசூல் அதிகரிக்கவில்லை. ஆக இரண்டு படங்களுமே நஷ்டம்தான் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீசில்.


இதனால் அடுத்து அக்டோபர் 7ல் வரஉள்ள றெக்க, தீபாவளிக்கு வரும் கொடி ஆகிய இரு படங்களும் வியாபார ரீதியாக சிரமங்களைச் சந்தித்து வருகின்றன.

English summary
Due to the Aandavan Kattalai's poor performance in BO, Rekka facing trouble in release on Oct 7th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil