»   »  சினேகா, பிரசன்னா இடையே பிரச்சனையா?

சினேகா, பிரசன்னா இடையே பிரச்சனையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சினேகாவுக்கும் அவரது கணவரும், நடிகருமான பிரசன்னாவுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்தார். அவர்களுக்கு விஹான் என்ற மகன் உள்ளார். மகனின் முதலாவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்கள்.

Trouble in Sneha, Prasanna's love nest?

கோலிவுட்டின் அழகிய ஜோடிகளில் ஒன்றாக வலம் வருகிறார்கள். திருமணம், கர்ப்பம், பிரசவம் ஆகியவற்றால் நடிக்காமல் இருந்த சினேகா தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார்.

பிரசன்னா கோலிவுட், டோலிவுட் என பிசியாக உள்ளார். படங்களில் நடித்தாலும் படத் தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என்பதே பிரசன்னாவின் ஆசை. தயாரிப்பாளர்கள் தற்போது படும்பாட்டை பார்த்த சினேகா தயாரிப்பு எல்லாம் வேண்டாம் என்று கூறினாராம்.

இந்த விவகாரத்தால் கணவன், மனைவி இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாம்.

English summary
Buzz is that all is not well between actress Sneha and her actor hubby Prasanna. Prasanna wants to enter film production while Sneha is reportedly against it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil