twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Exclusive : பேட்ட, விஸ்வாசம் வசூல் நிலவரம்.. ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்: திருச்சி ஸ்ரீதர்

    பேட்ட, விஸ்வாசம் பட வசூல் நிலவரங்கள் தவறானவை என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் தெரிவித்துள்ளார்.

    |

    சென்னை : பேட்ட மற்றும் விஸ்வாசம் பட வசூல் குறித்து வெளியாகி வரும் அனைத்து தகவல்களும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்கள் என விமர்சித்துள்ளார் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர்.

    பொங்கலையொட்டி கடந்த வாரம் ரிலீசானது ரஜினி நடித்த பேட்ட படமும், அஜித் நடித்த விஸ்வாசம் படமும் ரிலீசானது. தொடர்ந்து அமைந்த விடுமுறை காரணமாக அரங்கு நிறைந்த காட்சிகளாக இரண்டு படமும் ஓடி வருகிறது. இதனால் விமர்சன ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் இரண்டு படங்களும் வெற்றி பெற்றுள்ளன.

    ஆனால், இரண்டு படத்தில் எது அதிக வசூலை அள்ளியது என்பதில் தொடர்ந்து இருதரப்பு ரசிகர்களிடையேயும் மோதல் நீடித்து வருகிறது.

    வசூல் மோதல்:

    வசூல் மோதல்:

    பேட்ட படம் ரூ. 100 கோடி வசூலித்திருப்பதாக நேற்று திருப்பூர் சுப்பிரமணியன் கூறியிருந்தார். அதற்குப் பதிலடியாக விஸ்வாசம் படம் 125 கோடியை வசூல் செய்துவிட்டதாக கேஜேஆர் ஸ்டூடியோஸ் தெரிவித்தது. இந்த வசூல் மோதல் கோலிவுட்டில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

    சாத்தியமில்லை:

    சாத்தியமில்லை:

    இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க முன்னாள் இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில், "இரண்டு படங்களுக்குமாக அவர்கள் சொன்ன கணக்கு சாத்தியமில்லாத ஒன்று. இரு படங்களும் நன்றாக இதுவரை ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அவர்கள் சொன்ன 100 கோடி, 125 கோடி வசூல் என்பது அதற்குள் கிடைக்க வாய்ப்பில்லை.

    வடிகட்டிய பொய்:

    வடிகட்டிய பொய்:

    இந்த வசூல் நிலவரம் என்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். பல்வேறு கட்டங்களுக்குப் பிறகு தான் தயாரிப்பாளர் கைக்கு வசூல் பணம் செல்கிறது. அப்படியிருக்கையில் இவ்வளவு தொகையை எப்படி அவர்கள் கூறுகிறார்கள் என்பது தெரியவில்லை. அடுத்த வாரத்தில்தான் உண்மையான வசூல் நிலவரம் தெரியவரும்.

    இதுவும் வியாபாரம் தான்:

    இதுவும் வியாபாரம் தான்:

    ரஜினி, கமல், அஜித், விஜய் என யாருக்கும் நான் எதிரியல்ல. இப்படியாக வசூல் நிலவரத்தை மாற்றிக் கூறுவதால் சம்பந்தப்பட்ட நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் அடுத்த பட வியாபாரம் கூடும். மக்கள் மத்தியில் அவர்களுக்கு செல்வாக்குக் கூடும்.

    உண்மையான நிலவரம்:

    உண்மையான நிலவரம்:

    இதற்காகத்தான் இப்படி வாய் கூசாமல் பொய் சொல்கிறார்கள். இதனால் உண்மையான வசூல் நிலவரம் மக்களைச் சென்றடைவதில்லை" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    The Tamilnadu theatre owner association joint secretary Trichy Sreedhar said that the box office collection reports given by Petta and Viswasam team is fake.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X