ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.. பெண்களுக்கு கிடைத்த வெற்றி.. டிரம்ப் அதிரடி!

டெல்லி: பாலியல் வழக்கில் ஹார்வி வெயின்ஸ்டீன் குற்றவாளி என வழங்கப்பட்ட தீர்ப்பு, பெண்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து, தனது கருத்தை முன் வைத்துள்ளார்.

பட வாய்ப்புக்காக ஹாலிவுட் நடிகைகளை, படுக்கைக்கு அழைத்து, பாலியல் வன் கொடுமை செய்ததாக ஹார்வி வெயின்ஸ்டீன் மீது தொடரப்பட்ட வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு கிடைத்துள்ளது.

குற்றவாளி

குற்றவாளி

ஆஸ்கர் உள்ளிட்ட பல விருதுகளை வென்ற பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது, 80க்கும் மேற்பட்ட பெண்கள் அளித்த புகாரை விசாரித்து வந்த நியூயார்க் நீதிமன்றம், ஹார்வி வெயின்ஸ்டீன் வாதங்களை நிராகரித்து, அவர் குற்றவாளி என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது.

மீடூ எதிரொலி

மீடூ எதிரொலி

அத்துமீறி பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு எதிராக உலகளவில் உருவான மீடூ இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி என்றும், இது பார்க்கப்படுகிறது. ஹார்வி வெயின்ஸ்டீன் மட்டுமின்றி, உலகளவில் பல சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் இதுபோன்ற பாலியல் அத்துமீறல்களை தொடர்ந்து செய்து கொண்டே வருகின்றனர்.

பயம் வரும்

பயம் வரும்

இந்த வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ள ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு குறைந்தது 25 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு, பெண்கள் மீது அத்துமீற நினைக்கும் பணக்கார முதலைகளுக்கு ஒரு பாடமாகவும், பயத்தையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்களுக்கான வெற்றி

பெண்களுக்கான வெற்றி

இந்தியாவிற்கு இரண்டு நாட்கள், தனது மனைவியுடன் சுற்றுலா வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு குறித்து, நேற்று தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு பெண்களுக்கான வெற்றி என்றும், இது நிச்சயம் ஒரு வலிமையான கருத்தாக அனைவருக்கும் அறியப்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X