பவர் ஸ்டாருடன் மாலை மாற்றிக் கொண்ட வனிதா விஜயக்குமார்... உண்மையில் என்ன தான் நடந்தது ?

சென்னை : விஜய் டிவி.,யில் பிக்பாஸ் சீசன் 4 ல் கலந்து கொண்டது முதல் வனிதா விஜயக்குமார் பற்றிய ஏதாவது ஒரு தகவல் வெளிவந்து, பரபரப்பை கிளப்பிக் கொண்டு தான் உள்ளது. திருமணம், விவாகரத்து, சர்ச்சை என வனிதா என்ன செய்தாலும் அது பரபரப்பாகி விடுகிறது.

இதற்கிடையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட மோதலால் அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் வனிதா. இது மற்றொரு சர்ச்சையை கிளப்பியது.

அடித்து சொன்ன ஜோதிடர்

அடித்து சொன்ன ஜோதிடர்

இது போதாதென்று தனியார் சேனல் ஒன்று வனிதாவின் எதிர்காலம் பற்றி ஜோதிடர் கணித்து சொன்னதாக வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில், வனிதா மீண்டும் திருமணம் செய்து கொள்வார். அவரது வருங்கால கணவரின் பெயர் எஸ் என்ற எழுத்தில் ஆரம்பமாகும் என கூறப்பட்டது.

அரசியலுக்கும் வருவார்

அரசியலுக்கும் வருவார்

போதா குறைக்கு வனிதா அரசியலுக்கும் வருவார். தமிழக அரசியலில் அவர் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்து, முன்னாள் முதல் ஜெயலலிதாவை போல் மிகப் பெரிய தலைவராக வருவார் என்று வேறு கிளப்பி விட்டனர்.

 வனிதா பதிவிட்ட ஃபோட்டோ

வனிதா பதிவிட்ட ஃபோட்டோ

என்னடா திடீரென இப்படி ஒரு வீடியோ வெளிவந்துள்ளதே என பார்த்தால், இந்த வீடியோ வெளியாவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு தான் வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில், காமெடி நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலை மாற்றிக் கொள்வது போன்ற ஃபோட்டோவை பதிவிட்டிருந்தார்.

கேள்வி கேட்ட ரசிகர்கள்

கேள்வி கேட்ட ரசிகர்கள்

இந்த ஃபோட்டோவுடன் ரெட் ஹார்ட் எமோஜிக்களையும் வனிதா பதிவிட்டிருந்தார். இதை பார்த்து விட்டு ஷாக் ஆன ரசிகர்கள், வனிதாவிற்கு மீண்டும் திருமணம் ஆகி விட்டதா என கமெண்டில் கேட்க துவங்கினர். இதனால் வனிதா விஜயக்குமார் டென்ஷனாகி, ஒரு ஃபோட்டோ பதிவிட்டது குத்தமா என கேட்டு வருகிறார்.

இன்னொரு ஃபோட்டோ வேறு இருக்கு

இன்னொரு ஃபோட்டோ வேறு இருக்கு

என்ன விஷயம் என விசாரித்து பார்த்தால், இது வனிதா நடிக்கும் புதிய படம் ஒன்றின் ஃபோட்டோ டெஸிற்காக எடுக்கப்பட்டதாம். இந்த ஃபோட்டோ மட்டுமல்ல, சின்னத்திரை நடிகர் அபிஷேக்குடன் வனிதா நெருக்கமாக இருப்பது போல் மற்றொரு ஃபோட்டோவும் வெளியாகி உள்ளது. இந்த ஃபோட்டோவை பார்த்து விட்டு இன்னும் என்னவெல்லாம் கிளப்பி விடப் போகிறார்களோ.

குவியும் பட வாய்ப்புக்கள்

குவியும் பட வாய்ப்புக்கள்

வனிதா தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார். பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாகவும், மற்றொரு புதிய படத்தில் நீயா நானா கோபிநாத்திற்கு ஜோடியாகவும் நடிக்கிறார். மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் ஒரு படத்திலும் வனிதா நடிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X