»   »  'எல்லாப்புகழும் சூர்யா & அனிருத்துக்கே..' - சும்மா இருக்கும் ரஹ்மானை சீண்டிய விக்னேஷ் சிவன்!

'எல்லாப்புகழும் சூர்யா & அனிருத்துக்கே..' - சும்மா இருக்கும் ரஹ்மானை சீண்டிய விக்னேஷ் சிவன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
காரை பரிசளித்த சூர்யா! ஏன்? எதற்கு?- வீடியோ

சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற 'ஆளப்போறான் தமிழன்' பாடல் யூ-ட்யூபில் செம ஹிட் ஆனது. இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ தான் அதிகம் பார்க்கப்பட்ட பாடலாக இருந்தது.

இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம் பெற்ற 'சொடக்கு மேல சொடக்கு' பாடலின் லிரிக்கல் வீடியோ, 'மெர்சல்' பாடலை விட அதிக வியூவ்ஸ் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.

TSK song reaches most views on youtube

இந்த சாதனையை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நேற்று ரசிகர்களுக்கும், படக்குழுவினருக்கும் ட்விட்டரில் நன்றி தெரிவித்த விக்னேஷ் சிவன் 'மெர்சல்' இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை சீண்டுவது போல ட்வீட் செய்திருக்கிறார்.

'எல்லாப்புகழும் சூர்யா மற்றும் அனிருத்துக்கே... மனமார்ந்த நன்றிகள் மற்ற அனைவருக்கும்' என பதிவிட்டிருக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் எந்த சாதனை புரிந்தாலும் 'எல்லாப்புகழும் இறைவனுக்கே' என சொல்வது வழக்கம்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பிரத்யேகமான வசனத்தைப் பயன்படுத்தி அவரது பாடல் சாதனையை தகர்த்ததைக் குறிப்பிட்டிருக்கிறார் விக்கி. யார் வம்பு தும்புக்கும் போகாத ஏ.ஆர்.ரஹ்மானை விக்னேஷ் சிவன் சீண்டியது ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

English summary
'TSK' Sodakku song reached the most viewed lyrical video of kollywood in youtube. Vignesh shivan tweeted about this.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X