மாமன் பொண்ணுக்கு தாலியைக் கட்டிய TTF வாசன்.. 5 வருட காதலி மனைவி ஆகிட்டாங்க.. ஆனால் முகத்தை..

சென்னை: சர்ச்சைகளால் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இணையவாசிகள் மத்தியில் குறிப்பாக 2கே கிட்ஸ்களுக்கு மத்தியில் இவர் மிகவும் பிரபலமானவர். பைக்கில் ஹார்ஸ் ரைட் செய்து பிரபலமான இவர் சர்ச்சைக்கு பெயர் பெற்றவர். வேகமாக பைக் ஓட்டிச் சென்று விபத்துகளை எல்லாம் ஏற்படுத்தி உள்ளார். இதனால் அவரது ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் இவர் திடீரென தனது மாமன் மகளை திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், " நாளைக்கு எனக்கு கல்யாணம் ஆகப்போதுனு நினைக்கிறேன். நான் ராஜஸ்தானில் ரைட் செய்து கொண்டு இருந்தேன். திடீரென எனது மாமன் மகள் போன் செய்து, ரொம்பவும் எமர்ஜென்சி நீ வந்தே ஆகனும்னு சொல்லிட்டாங்க. நானும் அங்கிருந்து காரில் வந்து விட்டேன். எனது மாமன் மகள் ஸ்வீட்டு எனது அத்தைக்கு போன் செய்து நாங்கள் 5 ஆண்டுகள் காதலிக்கிறோம் என்று சொல்லிவிட்டார்.

ttf vasan marriage Viral Bike Ride Vloger Actor TTF Vasan Knot His Lover Video
Photo Credit:

இதுக்கு அப்புறம் வீட்டுக்கு போக மாட்டேன் என்று சொல்லி என்னுடன் கிளம்பி வந்துவிட்டார். அதனால, எனக்குத் தெரிந்து நாளைக்கு நாங்கள் கல்யாணம் செய்து விடுவோம் என்று நினைக்கிறேன். இன்னும் ஒரு மூனு மாசம் டைம் கொடு ஸ்வீட்டு, நம்ம படம் ரிலீஸ் ஆகிடும். அதுக்கு அப்புறம் வந்து கெத்தாக பொண்ணு கேட்கிறேன். அது இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும்ல என்று சொன்னேன்.

எங்க அத்தையிடம் இது தொடர்பாக பேசிவிட்டேன். மாமாவிடம் இது தொடர்பாக இன்னும் பேசவில்லை.மாமாவுக்கு இந்த விஷயம் தெரியுமா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நாங்கள் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டோம் என்பது மட்டும் தெரியும். ஒருவேளை அவர்கள் யோசித்து வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ரொம்பவும் ஆசை. எனக்கு அப்பா இல்லை என்பதால் எனது அப்பாவை நான் எப்படி எல்லாம் பார்த்துக் கொள்ள ஆசைப்பட்டேனோ, அதேபோல மாமனாரைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை உள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

ttf vasan marriage Viral Bike Ride Vloger Actor TTF Vasan Knot His Lover Video
Photo Credit:

இந்நிலையில் அவர் மாலையும் கழுத்துமாக தனது மாமன் மகளுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவையும் புகைப்படத்தையும் பார்த்த இணையவாசிகள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதில் தனது மனைவியின் புகைப்படத்தை டிடிஎஃப் வாசன் வெளியிடவில்லை. அதாவது அவரது முகத்தை மறைத்தபடியே புகைப்படமும் வீடியோவும் வெளியிட்டுள்ளார். வீடியோவைப் பார்க்கையில் நண்பர்கள் மத்தியில் திருமணம் நடைபெற்றிருக்கும் போலத் தெரிகிறது.

More from Filmibeat

Read more about: marriage viral video ttf vasan viral
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X