»   »  பவர்ஸ்டார் இருக்கும் திகாரில் தான் தினகரனும்: பேச்சுத் துணைக்கு ஆள் கிடைச்சிருச்சோ?

பவர்ஸ்டார் இருக்கும் திகாரில் தான் தினகரனும்: பேச்சுத் துணைக்கு ஆள் கிடைச்சிருச்சோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பண மோசடி வழக்கில் கைதான பவர் ஸ்டார் சீனிவாசன் திகார் சிறையில் இருக்கும் நேரத்தில் டிடிவி தினகரனும் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பண மோசடி வழக்கில் டெல்லி போலீசார் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனை கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். மோசடி வழக்கில் கைதான பவர் ஸ்டார் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

TTV Dinkaran is lodged in Tihar jail as Powerstar Srinivasan

மோசடி வழக்கில் முன்பும் ஒரு முறை திகாரில் அடைக்கப்பட்டார் பவர். திகார் ரொம்ப நல்ல ஜெயிலு, அங்கிருக்கும் அதிகாரிகள் என் ரசிகர்கள் என்று கூலாக சொன்னவர் தான் பவர்.

இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற தேர்தல் ஆணையத்திற்கு ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தினகரனும் திகார் சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளனர். பவரும், தினகரனும் ஒரே பிளாக்கில் உள்ளார்களா என்பது தெரியவில்லை.

English summary
TTV Dinkaran who got arrested in bribery case is lodged in Tihar jail as actor Powerstar Srinivasan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil