twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த அரசு துடைத்தெறியப்பட வேண்டும், மோடி மவுனம் கலைக்கணும்: திரையுலகினர் கொந்தளிப்பு #sterlite

    By Siva
    |

    Recommended Video

    மோடியை எதிர்த்து கமல், விஷால், விவேக், பார்த்திபன் ட்வீட்- வீடியோ

    சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு திரையுலகினர் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    தூத்துக்குடியில் சுவாசிக்க நல்ல காற்று வேண்டும் என்று கூறி போராடிய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்த கொடுமையை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் மோடி மவுனம் கலைக்க வேண்டும் என்று விஷால் கூறியுள்ளார்.

    விஷால்

    பிரதமர் மோடி மவுனம் கலைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. 2019 பற்றி மக்கள் கவனமாக யோசிக்க வேண்டும் என்கிறார் விஷால்.

    ராஜு முருகன்

    தூத்துக்குடியில் நடந்த சம்பவம் மன்னிக்கவே முடியாத அரச பயங்கரவாதம் என்று கொந்தளித்துள்ளார் ஜோக்கர் பட இயக்குனர் ராஜு முருகன்.

    நடிகர் சங்கம்

    தூத்துக்குடி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பலியானவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது தென்னிந்திய நடிகர் சங்கம்.

    விவேக்

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களை நினைத்து தன் இதயம் அழுவதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

    பார்த்திபன்

    பிணநாயகம்
    ●●●●●●●●●●●
    துப்பாக்கி வெடிக்கும் - தெரிந்தும்,
    புரட்சி வெடிக்கும் - தெரியாமலும்
    அதிகாரம் ஜனநாயகத்தை
    ஒடுக்க நினைக்கிறது
    பசியால்
    மார்பை நாடி வரும் சிசுவை
    முலைக்காம்பே தோட்டாவாக இயங்கி சிதைத்து ரத்தமூட்டுதல் போல ...தம் மக்களை தாயே(அரசே) கொன்று குவித்தால்? என்று பார்த்திபன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    கமல் ஹாஸன்

    தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறனார் கமல் ஹாஸன்.

    English summary
    Kollywood celebrities including Vishal, R. Parthiban, Raju Murugan have condemned the Tuticorin shooting and expressed their condolences.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X