»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்த் திரையுலகத்தினரின் நடவடிக்கை காரணமாக சாட்டிலைட் டிவி சானல்களில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்களையிழந்தன.

பனி மழை பெய்யும் மார்கழி மாதத்தில் கன மழை பெய்தால் எப்படி ஆச்சரியமாக இருக்குமோ அதை விட பெரியஆச்சரியமாக தமிழ்த் திரையுலகினரின் எதிர்பாராத ஒற்றுமை இருந்தது.

மேலும் இவர்களின் உறுதியான நடவடிக்கை காரணமாக தனியார் சாட்டிலைட் டிவி சானல்களில் ஒளிபரப்பானபொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் பொலிவிழந்து விட்டன.

தனியார் சாட்டிலைட் டிவி சானல்களினால் திரையுலகே அழிந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இது இனியும்நீடித்தால் சினிமா எடுப்பதையே விட்டு விட்டு அத்தனை தயாரிப்பாளர்களும் டிவி பக்கம் போய் விடுவார்கள்.

இதைத் தடுக்க தனியார் சாட்டிலைட் டிவி சானல்களுக்கு நடிகர், நடிகையர் உள்ளிட்ட அனைத்துத் திரையுலகினரும்பேட்டியோ, நகழ்ச்சிகளோ தரக் கூடாது, படக் காட்சிகளையும் கூட 3 நமிட கிளிப்பிங்குகள் மட்டுமேகொடுக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு அதிரடி முடிவுகளை கடந்த டிசம்பர் மாதம் உருவான தமிழகதிரைப்படக் கூட்டமைப்பு எடுத்தது.

பல்வேறு திரைப்பட சங்கங்களை உள்ளடக்கியது இந்தக் கூட்டமைப்பின் முடிவுகளை மீறிய நடிகர் கமலஹாசன்,நடிகை சிம்ரன் உள்ளிட்ட பலர் மீது கடும் நடவடிக்கையையும் இது எடுத்தது.

கமல்ஹாசன் மீதே நடவடிக்கையா என்ற அதிர்ச்சி ஒரு பக்கம் இருக்கையில், கூட்டமைப்பின் இந்த முடிவினால்சாட்டிலைட் சானல்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு (2002) பொங்கல் பண்டிகையின்போது 7 புதிய படங்கள் ரிலீசாகின. பொதுவாக ஒரு புதுப் படம்வெளியாகப் போகும்போது அதற்கு ஒரு வாரம், பத்து நாட்களுக்கு முன்பே அந்தப் படங்கள் சம்பந்தப்பட்டகாட்சிகளை தனியார் சாட்டிலைட் சானல்கள் ஒளிபரப்பத் தொடங்கி விடும்.

ஆனால் இந்த முறை அது நடக்கவில்லை. விளம்பரங்கள் தவிர வேறு எந்த நிகழ்ச்சியிலும் புதிய படங்களின் பாடல்காட்சிகளையோ வசனக் காட்சிகளையோ டிவிக்களில் காண முடியவில்லை.

பொங்கல் தினத்தின்போது புதிய படங்களின் பாடல்கள் என்ற நிகழ்ச்சியே பல சானல்களில் காணாமல் போயின.

அப்படியே ஒரு சில சானல்களில் போட்டாலும் கூட விளம்பரத்திற்காக அந்த சானல்களிடம் படத் தயாரிப்பாளர்கள்வழங்கிய 3 நிமிட கிளிப்பிங்குகளையே அவர்கள் புதிய பாடல்களாக காட்டி சமாளித்தனர். எனவே ஒவ்வொருபுதிய பாடலும் பிட்டு பிட்டாகவே ஒளிபரப்பாகின.

இதுதவிர முன்னணி டிவி சானல் மற்றும் அதன் சக டிவியும் பல நடிகர், நடிகையரின் பேட்டிகளை ஒளிபரப்பின.ஆனால் அவை அத்தனையும் அரதப் பழசு என்பதை டிவி பார்த்த அனைவருமே உணர்ந்திருப்பார்கள்.

பல முன்னாள் நடிக-நடிகைகள் டிவியில் வந்து பேட்டி கொடுத்ததைப் பார்க்க வேடிக்கையாகத்தான் இருந்தது.முன்பே கொடுத்திருந்த பேட்டியை தூசு தட்டி இப்போது ஒளிபரப்புகிறார்கள் என்று திரைத்துறையினர் கூடநக்கலாக சிரித்தனர்.

திரையுலக கூட்டமைப்பினரின் இந்த உறுதியான நடவடிக்கை மேலும் தொடர்ந்தால் சாட்டிலைட் சேனல்கள்கடுமையாக பாதிக்கப்படும் என்று தெகிறது. காரணம், திரை விமர்சனம் என்ற பெயரில் ஒவ்வொரு சானலும்ஒவ்வொரு படத்தையும் கிட்டத்தட்ட முழுவதுமாகவே ஒளிபரப்பி விடும் நிலைமை முதலில் இருந்தது.

அது இனி நடக்காது. திரை விமர்சனத்திற்காக புதுப் படங்கள் எதையுமே கொடுக்கக் கூடாது என்று கூட்டமைப்புகட்டளையிட்டு விட்டது.

இதனால், பல நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நல்ல படமாக இருந்தாலும் கூட அதில் தமக்கு வேண்டப்படாதநடிகர் நடித்திருந்தால், அந்தப் படத்தைப் பற்றி தாறுமாறாக விமர்சனம் செய்வது ஒரு முன்னணி சாட்டிலைட்டிவியின் வழக்கம்.

ஒரு உயரமான சேரில் ஒய்யாரமாக கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு, சேது-லேது, ரெட்-டெட்,தில்-ஜில் என மணி ரத்னம் ஸ்டைலில் வார்த்தைகளை கடித்து குதறித் துப்பும் அந்த டிவியின் போக்கு திரைப்படஉலகினரின் ஒட்டு மொத்த எதிர்ப்புகளை சம்பாதித்துள்ளது.

இனிமேல் இப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு இடமேயில்லை என்று திரைத்துறையினர் உறுதியாக கூறுகின்றனர்.கோடிக்கணக்கில் பணத்தைப் போட்டு படம் எடுக்கும் எங்களைப் பற்றி, எங்களிடமே கிளிப்பிங்குகளை வாங்கிவிட்டு தாறுமாறாக விமர்சனம் செய்வதைப் பொறுத்துக் கொள்வதற்கு நாங்கள் என்ன இளிச்சவாயர்களா என்றுஅவர்கள் குமுறுகிறார்கள்.

மேலும், பொங்கலுக்கு வந்த படங்கள் குறித்து எதுவுமே ஒளிபரப்பாகாத நிலையில், புதுப்படங்களைப்பார்ப்பதற்காக தியேட்டர்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதியது.

கமலஹாசன் நடித்துள்ள "பம்மல் கே சம்பந்தம்", அஜீத்தின் "ரெட்", சத்யராஜ்-மும்தாஜ் நடித்துள்ள "விவரமான ஆளு"என பல பிரபலங்களின் படங்களைப் பார்க்க தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

இது திரையுலகுக்கும் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. கூட்டமைப்பின் முடிவுகளால் அதிருப்தியுடன் இருந்தசிலரும் கூட இப்போது கிடைத்துள்ள கைமேல் பலனைப் பார்த்து கூட்டமைப்புடன் ஒத்துப் போக முடிவுசெய்துள்ளதாகத் தெகிறது.

இதற்கிடையே, திரையுலக கூட்டமைப்பினரின் உறுதியான நடவடிக்கை மேலும் தீவிரமாகும் என்றுகருதப்படுகிறது.

பொங்கல் சிறப்பு நகழ்ச்சிகளில் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை மீறி பேட்டியோ, வேறு எந்தவிதத்திலோநிகழ்ச்சிகளைக் கொடுத்த கலைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil