twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரபல ஹீரோவுடன் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மோசடி..டிவி நடிகர் பரபரப்பு புகார்.. இளம் பெண் மாயம்!

    By
    |

    மும்பை: பிரபுதேவா இயக்கும் படத்தில் நடிக்க வைப்பதாகக் கூறி, டிவி நடிகரிடம் மோசடி செய்த இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி சில கும்பல்கள் மோசடி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுபற்றி அவ்வப்போது புகார்கள் வருவதும் உண்டு. சில இயக்குனர்கள், யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்திய சம்பவங்களும் நடந்துள்ளன.

    கடவுள விடுங்க.. கொரோனாவால கூட என் படம் ரிலீஸ் ஆகுறத நிறுத்த முடியாது.. பிரபல இயக்குநர் அதிரடி!கடவுள விடுங்க.. கொரோனாவால கூட என் படம் ரிலீஸ் ஆகுறத நிறுத்த முடியாது.. பிரபல இயக்குநர் அதிரடி!

    ஆன்ஸ் அரோரா

    ஆன்ஸ் அரோரா

    இந்நிலையில், டிவி நடிகர் ஒருவரே இப்படிப்பட்ட மோசடியில் சிக்கியுள்ளார் என்பது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியில் தன் ஹையான் உட்பட சில டிவி. தொடர்களில் நடித்திருப்பவர் ஆன்ஸ் அரோரா (Aansh Arora). மும்பை லோகண்ட் வாலா பகுதியில் தங்கி இருந்து சினிமாவிலும் வாய்ப்புத் தேடி வந்தார்.

    ஏஜென்ட்

    ஏஜென்ட்

    இந்நிலையில் ஸ்ருதி என்ற பெண் இவருக்கு அறிமுகமானார். பிரபல இந்தி ஹீரோ சல்மான் கானின் படத் தயாரிப்பு நிறுவனமான சல்மான் கான் பிலிம்ஸில் பணியாற்றுவதாகவும் அவர் படங்களுக்கு நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் காஸ்டிங் ஏஜென்டாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதை நம்பினார் ஆன்ஸ் அரோரா.

    பிரபுதேவா

    பிரபுதேவா

    பின்னர் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கும் ஏக்தா டைகர் 3 படத்தின் நெகட்டிவ் கேரக்டருக்கு உங்களை சிபாரிசு செய்கிறேன் என்றார். கதையும் கேரக்டரையும் கூறியிருக்கிறார். பின்னர் வரும் 3 ஆம் தேதி இயக்குனர் பிரபுதேவாவை சந்திக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதை நம்பிய அரோரா, மகிழ்ச்சியில் இருந்தார்.

    நம்பினார் அரோரா

    நம்பினார் அரோரா

    திடீரென்று போன் செய்து, டைரக்டர் பிசியாக இருக்கிறார். இப்போது பார்க்க வேண்டாம் என்று கூறிய ஸ்ருதி, வில்லன் கேரக்டருக்கான பரிந்துரை லிஸ்டில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றும் செலக்ட் ஆகிவிடுவீர்கள் என்றும் கூறினார். இதை நம்பிக் கொண்டிருந்த அரோராவுக்கு மகிழ்ச்சித் தாங்கவில்லை.

    சல்மான் தரப்பு விளக்கம்

    சல்மான் தரப்பு விளக்கம்

    இந்நிலையில்தான் சல்மான் கானின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டது. அதில், நானோ, எனது தயாரிப்பு நிறுவனமோ யாரையும் காஸ்டிங் ஏஜென்டாக நியமிக்கவில்லை. நடிகர், நடிகைகளையும் தேர்வு செய்யவில்லை. இதுதொடர்பாக யாருக்கும் மெயிலோ, மெசேஜோ வந்திருந்தால், தயவு செய்து அதை நம்ப வேண்டாம். எனது பெயரை பயன்படுத்தி இதுபோன்ற மோசடியில் யாரும் ஈடுபட்டால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தனர்.

    Recommended Video

    Vishnu Vishal latest video | பயமா இருக்கு | Chennai Police
    இன்னொரு நடிகர்

    இன்னொரு நடிகர்

    இதனால் சுதாரித்துக்கொண்ட, ஆன்ஸ் அரோரோ தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை புரிந்துகொண்டார். இது தொடர்பாக மும்பை ஓஷிவாரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஸ்ருதி என்பவர் அனுப்பிய மெசேஜ்களையும் அவர் சமர்பித்தார். போலீசார் அவரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில் இன்னொரு டிவி நடிகர் விகாஷ் என்பவரும் இந்த படத்துக்காக சிலர் தன்னை அணுகினார்கள் என்று பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    T.v actor Aansh Arora has filed a complaint at Mumbai's Oshiwara Police Station against an imposter trying to dupe him in the name of Salman Khan Films.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X