»   »  திருமணமான ஒரே ஆண்டில் தெலுங்கு டிவி நடிகரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை

திருமணமான ஒரே ஆண்டில் தெலுங்கு டிவி நடிகரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

விசாகப்பட்டினம்: பிரபல தெலுங்கு டிவி நிகழ்ச்சியான ஜபர்தஸ்த் மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகர் பொட்டி ரமேஷின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிரபல தெலுங்கு டிவி நிகழ்ச்சியான ஜபர்தஸ்த் மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகர் பொட்டி ரமேஷ். அவருக்கும் திரிபுரம்பிகா(22) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி திருமணமானது.

TV actor Potti Ramesh's wife ends life

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு திரிபுரம்பிகா விசாகப்பட்டினத்தில் உள்ள வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திரிபுரம்பிகா மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்ததை ரமேஷின் சகோதரி பார்த்துவிட்டு அலறினார்.

TV actor Potti Ramesh's wife ends life

உடனே குடும்பத்தார் வந்து கதவை உடைத்து திரிபுரம்பிகாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

TV actor Potti Ramesh's wife ends life

ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்த ரமேஷ் மனைவி இறந்த தகவல் கிடைத்தவுடன் விசாகப்பட்டினம் வந்தார். ரமேஷின் குடும்பத்தார் தங்களின் மகளை கொடுமைப்படுத்தி வந்ததாக திரிபுரம்பிகாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து ரமேஷ் குடும்பத்தார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
Popular TV show Jabardasth fame comedy actor Potti Ramesh's wife has committed suicide by hanging herself from a ceiling fan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil