twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'முதல்ல எங்க சம்பளத்தை கொடுங்க..' தயாரிப்பாளர் அலுவலகத்தில் டி.வி. நடிகர்கள் திடீர் போராட்டம்!

    By
    |

    மும்பை: தங்களது சம்பளத்தை கேட்டு டிவி சீரியல் தயாரிப்பு நிறுவனத்தின் முன் நடிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து அதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

    இருந்தும் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக, கடந்த 4 மாதமாக லாக்டவுன் பிறக்கப்பட்டுள்ளது.

    பொருளாதார இழப்பு

    பொருளாதார இழப்பு

    இதன் காரணமாக பலர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். பலருக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. தங்கள் வாழ்வாதாரங்களை ஏராளமானவர்கள் இழந்துள்ளனர். பல நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்குச் சம்பள குறைப்பை அறிவித்துள்ளன. தினசரி சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் கடும் கஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

    சினிமா, டிவி சீரியல்

    சினிமா, டிவி சீரியல்

    இந்நிலையில் இந்த லாக்டவுன் காரணமாக சினிமா மற்றும் டிவி சீரியல் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. தியேட்டர்கள் மூடப்பட்டன. அவை எப்போதும் திறக்கப்படும் என்பது இன்னும் தெரியாத நிலையில் பல படங்கள் ரிலீஸ் ஆகாமல் உள்ளன. சீரியல்களின் படப்பிடிப்பும் நடக்காமல் இருந்ததால், நடிகர், நடிகைகளுக்கு சம்பளம் கொடுக்காமல் சில நிறுவனங்கள் தவித்து வருகின்றன.

    இந்தி டிவி தொடர்

    இந்தி டிவி தொடர்

    இதற்கிடையே, சில கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்திக் கொள்ள சில மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன. இதையடுத்து பல டிவி தொடர் படப்பிடிப்புகள் பாதுகாப்போடு தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜீடிவியில் ஒளிபரப்பாகும் இந்தி தொடர் ஹமாரி பாஹு சில்க். ஸ்மித் சொடானி இயக்கும் இந்த தொடரில் சஹத் பாண்டே, ஸான் கான், ரீவா, ஊர்வி சிங் உட்பட பலர் நடிக்கின்றனர்.

    நடிகர்கள் போராட்டம்

    நடிகர்கள் போராட்டம்

    இந்த தொடரில் பணியாற்றும் பலருக்கு கடந்த சில மாதங்களாகச் சம்பளம் கொடுக்கப் படவில்லை. இதுபற்றி பேச தயாரிப்பாளர்களிடம் முயன்றால் போன் ஸ்விட்ச் ஆப் என்று வருகிறதாம். இதனால் மும்பை வெர்சோவாவில் உள்ள இந்த தொடரை தயாரிக்கும் தயாரிப்பாளர் அலுவலகத்தின் வெளியே, நடிகர் ஸான் கான் தலைமையில் நடிகர்கள் ஒன்று கூடி, சம்பளம் கேட்டு நேற்று போரட்டத்தில் ஈடுபட்டனர்.

    நடிகர்கள் அதரவு

    நடிகர்கள் அதரவு

    இதையடுத்து அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஸான் கான். அவர்களுக்கு மேலும் பல டிவி தொடர் நடிகர்கள் அதரவு தெரிவித்துள்ளனர். சமீபத்தில் ஸான் கான் அளித்த பேட்டியில், லாக்டவுனுக்கு பிறகு நடிகர், நடிகைகள் சம்பளம் குறைக்கப்பட இருக்கிறது. எனது நண்பர் தினசரி ரூ.6 ஆயிரம் சம்பளம் வாங்கினார். அவருக்கு பாதியாக குறைத்திருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

    English summary
    Tv actor Zaan Khan leads protest outside producer’s building, demands payment for crew.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X