»   »  நாளை சின்னத் திரை நடிகர் சங்கத் தேர்தல்... மூன்று அணிகள் போட்டி!

நாளை சின்னத் திரை நடிகர் சங்கத் தேர்தல்... மூன்று அணிகள் போட்டி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கான தேர்தல் நாளை நடக்கிறது. மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

இது குறித்து சின்னத்திரை நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

சின்னத்திரை நடிகர், நடிகையர்களின் நலனுக்காக கடந்த 2003-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது சின்னத்திரை நடிகர் சங்கம். இது இன்றைக்கு சின்னத்திரை உலகில் முக்கியமான ஒரு தூணாக விளங்கி வருகிறது.

TV Actors Association election tomorrow

சங்கத்தின் உறுப்பினர்களான நடிகர், நடிகையர்களுக்கு பல உதவிகளை இச்சங்கம் செய்துள்ளது. சின்னத்திரை தயாரிப்பாளர்களுக்கும், நடிகர், நடிகைகளுக்கும் இடையில் பாலமாக இருந்து சின்னத்திரை தொடர்ந்து சுமூகமான நிலையில் இயங்க தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

உறுப்பினர்களின் குழந்தைகள் படிப்புச் செலவு, உறுப்பினர்களின் மருத்துவச் செலவு தரப்படாமல் இருந்த ஊதியத்தை தயாரிப்பாளர்களிடமிருந்து பெற்றுக்கொடுத்தல், சில நேரங்களில் சீரியல் தயாரிப்பில் ஏற்பட்ட குழப்பத்தினால் உறுப்பினர்களுக்கு விளைந்த கால்ஷீட் குளறுபடி இதனால் விளைந்த பிரச்சினைகள் என்று அனைத்திற்கும் இந்த சங்கம் ஒடோடிச்சென்று தனது உறுப்பினர்களுக்கு உதவி செய்து வருகிறது.

மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை இந்த சங்கத்துக்கு தேர்தல் நடப்பது வழக்கம். சென்ற மாதம் கூடிய சங்கத்தின் பொதுக்குழு முடிவு செய்து சங்கத்திற்கு தேர்தல் நடத்த ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்தேறியுள்ளன. தேர்தல் அதிகாரியாக பிரபல வசனகர்த்தாவும், இயக்குநருமான லியாகத் அலிகானும் துணைத் தேர்தல் அதிகாரியாக இயக்குநர் தம்பிதுரையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், 2 துணைத் தலைவர், 4 இணைச் செயலாளர், 14 செயற்குழு உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக் கமிட்டிக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

தற்போதைய தேர்தலில் நடிகர் பானுபிரகாஷ் தலைமையில் ஒரு அணி, நடிகர் யு.ரவிவர்மா தலைமையில் ஒரு அணி, நடிகர் பு.சிவன் சீனிவாசன் தலைமையில் ஒரு அணி என மூன்று அணிகள் போட்டியிடுகின்றன.

பானு பிரகாஷ் அணி

நடிகர் பானுபிரகாஷ் அணியில் தலைவர் பதவிக்கு பானுபிரகாஷ் செயலாளர் பதவிக்கு பாபூஸ் பொருளாளர் பதவிக்கு என்.எம். விஜய் ஆனந்த், போட்டியிடுகிறார்கள். துணைத் தலைவர் பதவிக்கு மனோபாலா ஓ.ஏ.கே.சுந்தர் இருவரும், இணைச் செயலாளர் பதவிக்கு டெல்லி கணேஷ், ராஜசேகர், சதீஷ், சங்கீதா பாலன் ஆகிய நான்கு பேர் போட்டியிடுகிறார்கள்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு டி பி கஜேந்திரன், சின்னி ஜெயந்த், தேவ், ஆனந்த், விஜயராஜன், அருணாதேவி, பத்ரகாளி ராஜசேகரன், உமா மகேஸ்வரி, .பி.அண்ணாதுரை, புவனா, சுந்தரி, டாக்டர். டி.கிரிதரன், ஸ்ரீகவி, ஆஸ்ரிதா, ஹேமாமாலினி ஆகிய 14 பேர் போட்டியிடுகின்றனர்.

ரவிவர்மா அணி

நடிகர் யு. ரவிவர்மா அணியில் தலைவர் பதவிக்கு யு.ரவிவர்மா, செயலாளர் பதவிக்கு எஸ்.கனகப்பிரியா, பொருளாளர் பதவிக்கு ஜெயந்த் போட்டியிடுகிறார்கள். துணைத் தலைவர் பதவிக்கு வின்சென்ட் ராய், கே.லஷ்மி பிரசன்னா இருவரும், இணைச் செயலாளர் பதவிக்கு டி.ஜெயந்த் மாதவ், லட்சுமி பிரியாஇ மணிகண்டன், எஸ்.ரமா ஆகிய நான்கு பேர் போட்டியிடுகிறார்கள்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு சவால் ராம், ஜவஹர் கார்த்திகேயன், கர்ணா, செல்வநாதன், நடன சபாபதி, ரோகிணி, சிவகவிதா, எஸ்.காமேஷ்குமார், மணிவண்ணன், குளஞ்சிநாதன், ஈஸ்வரி, ஹேமலதா, வனச்சாமி, கோமதி ஆகிய 14 பேர் போட்டியிடுகின்றனர்.

புவன் அணி

நடிகர் பு.சிவன் சீனிவாசன் அணியில் தலைவர் பதவிக்கு பு.சிவன் சீனிவாசன், செயலாளர் பதவிக்கு போஸ் வெங்கட், பொருளாளர் பதவிக்கு பரத் கல்யாண், போட்டியிடுகிறார்கள். துணைத் தலைவர் பதவிக்கு கமலேஷ், சோனியா இருவரும், இணைச் செயலாளர் பதவிக்கு பரத், எஸ்.கவிதா, எம்.டி.மோகன், ஸ்ரீகஜேஸ் ஆகிய நான்கு பேர் போட்டியிடுகிறார்கள்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு சாமுவேல் அசோக், ஆதித்யா, கற்பகவல்லி, வீ.நவீந்தர், பார்த்தசாரதி, ரவிசங்கர், சரத்சந்திரா, சிவகுமார், ஸ்ரீதரன், ஸ்ரீவித்யா, ஸ்வப்னா, தளபதி தினேஷ், வாசவி, வைரமணி ஆகிய 14 பேர் போட்டியிடுகின்றனர்.

வரும் டிசம்பர் 25 தேதி விருகம்பாக்கம் மார்க்கெட் அருகில் இருக்கும் யு.மு.சு. கல்யாண மண்டபத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினமே ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

English summary
The election for TV actors association will be held on Dec 25, Friday at Virugambakkam, Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil