»   »  விபச்சாரம்-டிவி நடிகை கைது

விபச்சாரம்-டிவி நடிகை கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil


சென்னையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட டிவி நடிகை ராதா என்பவரை விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள ராமநாதன் தெருவில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு மாறு வேடத்தில் சென்றனர்.

அந்த வீட்டில் இருந்த ராதா என்ற பெண் மாறு வேட போலீசிடம் உல்லாசமாக இருக்க ரூ.12,000 கேட்டார். இதையடுத்து மறைந்திருந்த போலீசார் வீட்டுக்குள் புகுந்து ராதா, அனுசியா, கவுசியா ஆகியோரையும், புரோக்கர்கள் ரமேஷ், சங்கர்சிங் ஆகியோரையும் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவரான ராதா, தெலுங்கு டிவி தொடர்களில் நடித்து வந்தவர் ஆவார். விபச்சாரத்தில் அதிக பணம் கிடைத்தால் அதையே நிரந்தர தொழிலாக்கி கீழ்ப்பாக்கத்தில் செட்டிலாகிவிட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil