»   »  விவசாயியிடம் பண மோசடி: டிவி நடிகை, அம்மாவுக்கு 2 ஆண்டு சிறை

விவசாயியிடம் பண மோசடி: டிவி நடிகை, அம்மாவுக்கு 2 ஆண்டு சிறை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: செக் மோசடி வழக்கில் பிரபல டிவி நடிகை மற்றும் அவரின் அம்மாவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

சல்மான் கானின் பஜ்ரங்கி பாய்ஜான் படத்தில் கரீனா கபூர் அம்மாவாகவும், குயீன் படத்தில் கங்கனா அம்மாவாகவும் நடித்தவர் அல்கா கவுசல். இந்தி தொலைக்காட்சி தொடர்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

TV actress, mom get two years imprisonment

அவரும், அவரது அம்மாவும் சேர்ந்து தொலைக்காட்சி தொடர் எடுப்பதாக விவசாயி அவதார் சிங்கிடம் ரூ. 50 லட்சம் கடன் வாங்கியுள்ளனர். ஆனால் சொன்னதுபடி தொலைக்காட்சி தொடர் எடுக்கவில்லை.

கொடுத்த பணத்தை கேட்டபோது அவதார் சிங்கிடம் இரண்டு செக்குகளை அளித்துள்ளார் அல்கா. அந்த செக்குள் பவுன்ஸாகிவிட்டன. இதையடுத்து அவதார் சிங் போலீசில் புகார் அளித்தார்.

இந்த வழக்கை விசாரித்த பஞ்சாபில் உள்ள மலர்கோட்லா நீதிமன்றம் அல்கா மற்றும் அவரது தாய்க்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து அல்கா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளாராம்.

English summary
Alka Kaushal, who was seen on popular shows Swaragini and Qubool Hai, has apparently been sentenced to two years in jail by the Malerkotla District Court.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil