»   »  ட்விட்டரில் 1 மில்லியன்: நம்ம 'டிடி'க்கு இம்புட்டு மவுசா?

ட்விட்டரில் 1 மில்லியன்: நம்ம 'டிடி'க்கு இம்புட்டு மவுசா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடிக்கு ட்விட்டரில் 10 லட்சம் ஃபாலோயர்கள் கிடைத்துள்ளனர்.

திரையுலக பிரபலங்கள், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என பலரும் ட்விட்டரில் உள்ளனர். ட்விட்டர் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளனர். டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினியும் ட்விட்டரில் உள்ளார்.

TV anchor DD gets 1 million followers on twitter

ட்விட்டரில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை தொட்டுள்ளது. நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தாலும் டிடி ரசிகர்கள் மத்தியில் இவ்வளவு பிரபலமா என்று பலரும் வியக்கிறார்கள். பல கோலிவுட் பிரபலங்களை விட டிடி அதிக ஃபாலோயர்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 1 மில்லியன் பற்றி டிடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

1 மில்லியன் தொடர்பாக அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். ஒரு டிவி பிரபலத்திற்கு இது நல்ல விஷயம்.. ட்விட்டர் குடும்பத்திற்கு எனது அன்பும், முத்தங்களும் நன்றி நண்பர்களே என தெரிவித்துள்ளார்.

English summary
TV anchor Divyadharshini has got 1 million followers on twitter. She thanked the twitter family for this feat.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil