»   »  நடிகர் சங்கத் தேர்தலில் மோதும் சின்னப் பாப்பா, பெரிய பாப்பா.. மற்றும் பலர்!

நடிகர் சங்கத் தேர்தலில் மோதும் சின்னப் பாப்பா, பெரிய பாப்பா.. மற்றும் பலர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத்தேர்தலில் சின்னத்திரை நட்சத்திரங்களும் களமிறங்கியுள்ளனர். சரத்குமார் அணியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் போட்டியிடுகின்றனர். இதில் சின்னப்பாப்பா பெரிய பாப்பா சீரியல் புகழ் நளினி, நிரோஷா ஆகியோர் போட்டியிடுவது சிறப்பம்சம்.

அக்டோபர் 18ம் தேதி நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், நாசர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றனர்.

TV artistes in Nadigar sangam election

நாசர் அணியில் நடிகை சோனியா, பிரேம் ஆகிய சின்னத்திரை நட்சத்திரங்களும், சரத்குமார் அணியில் ராதாரவி, ராம்கி, நிரோஷா, நளினி, பசி சத்யா, எஸ்.எஸ்.ஆர் கண்ணன், உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இதில் சரத்குமார், நிரோஷா, ராம்கி, ராதாரவி ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நடிகை நளினி சின்னத்திரை நடிகர் சங்கத்தலைவராக இருக்கிறார்.

குயிலி, ஆர்த்தி, பாத்திமா பாபு, குண்டு கல்யாணம், ஆகியோர் சரத்குமார் அணியில் போட்டியிட முடிவு செய்திருந்தனர். ஆனால் கட்சியினர் யாரும் போட்டியிடக்கூடாது என கட்சித்தலைமை அறிவித்து விட்டது. இதனையடுத்து இவர்கள் யாரும் போட்டியிடவில்லை. இதுவும் சரத்குமாருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Many TV artiestes including Nalini, Nirosha and others are contesting in Nadigar sangam elections.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil