twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பிரச்சினை... ‘சின்னப்பாப்பா’ விற்கு எதிராக போர்க்கொடி

    By Mayura Akilan
    |

    சென்னை: நடிகர் சங்கம் என்றாலே பிரச்சினைதான் என்றாகிவிட்டது இப்போது. சினிமா நடிகர் சங்க தேர்தலில் ஏற்பட்டுள்ள பிரச்சினை உலகறிந்த ரகசியமாக இருக்கிறது. இப்போது சின்னத்திரை நடிகர் சங்கத்திலும் புயல் உருவாகத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தலைவராக பதவி வகிக்கும் நளினிக்கு சங்கத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவரது நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த சங்கத்தின் பொருளாளர் வி.டி.தினகர், துணைத் தலைவர் ராஜ்காந்த், இணை செயலாளர்கள் பாபூஸ், கன்யா பாரதி, மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 16 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

    சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். தலைவராக இருந்த ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து 2014-2017ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. 1,300 உறுப்பினர்கள் கொண்ட இந்த சங்கத்தில், 700க்கு மேற்பட்ட நடிகர், நடிகைகள் வாக்களித்தனர். இதில் நளினி வெற்றி பெற்று தலைவியாக கடந்த ஆண்டு பொறுப்பேற்றார்.

    கோஷ்டி பூசல்

    கோஷ்டி பூசல்

    ஆனால் நளினி தலைமையிலான நிர்வாகிகள் மீது சின்னத்திரை நடிகர்களுக்கு அதிருப்தி உள்ளது. நளினி நடிப்புக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறார். சங்க பிரச்னைகளுக்கு முக்கியத்தும் தருவதில்லை என்றும், தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. நடிகர் சங்கத் தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்றவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள... சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தற்போது இரண்டு கோஷ்டிகள் உருவானது.

    திடீர் ராஜினாமா

    திடீர் ராஜினாமா

    இந்த நிலையில் தலைவர் நளினி, துணை தலைவர் மனோபாலா, செயலாளர் பூவிலங்கு மோகன், இணை செயலாளர் பாவனா ஆகியோர் கடந்த மே மாதம் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். ராஜினாமா செய்தனர். தற்போதுள்ள சூழ்நிலையில் எந்த பிரச்னையும் வேண்டாம் பதவியை தொடருங்கள் என்று பலரும் வற்புறுத்தியதை தொடர்ந்து ராஜினாமாவை வாபஸ் பெற்றனர்.

    16 பேர் ராஜினாமா

    16 பேர் ராஜினாமா

    இந்த நிலையில், துணைத் தலைவர் ராஜ்காந்த், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 16 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் நளினிக்கு அனுப்பி உள்ள ராஜினாமா கடிதத்தில், சின்னத்திரை நடிகர்கள் நலன் காக்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். ஆனால் உறுப்பினர்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி கடந்த ஓராண்டாக அவர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. அதற்கான முயற்சியையும் நீங்கள் எடுக்கவில்லை. இதைக்கேட்டால் ராஜினாமா செய்வேன் என்று மிரட்டுகிறீர்கள். பொது கருத்தை அறியாமல் தங்களுக்கு நெருக்கமான இருவரின் ஆலோசனைப்படி தன்னிச்சையாக முடிவெடுக்கிறீர்கள்.

    மீண்டும் தேர்தல் நடத்த வாய்ப்பு

    மீண்டும் தேர்தல் நடத்த வாய்ப்பு

    தொடர்ந்து தாங்கள் தன்னிச்சையாகவும், அதிகாரத்துடனும் நடந்து வருவதால் உங்கள் தலைமையின் கீழ் உறுப்பினர்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது என்பதால் ராஜினாமா செய்கிறோம். பெரும்பாண்மையானவர்கள் ராஜினாமா செய்வதால் உடனடியாக தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யுங்கள். இவ்வாறு தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

    English summary
    TV artistes are raising voice against their association president Nalini and some of the functionaries have resigned their posts.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X